a

கணவன்-மனைவி வாழ்க்கை முறையில் வெறுப்பு – ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு பெருகும் ஆதரவு…!


ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரினச் சேர்க்கைக்கு உலகில் பல நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இவர்கள் திருமணம் செய்து வாழவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில்தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற பல மாகாணங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதே நேரம், 14 மாகாணங்களில் இந்த திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி திருமணம் செய்து கொண்டு சட்ட அங்கீகாரத்துடன் தம்பதியராக வாழலாம் என்றும் இதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அறிவித்தது.

Also Read  கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற போலீஸ் – அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்...!

இந்தநிலையில், ‘கேலப்’ என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்துக்கு 73 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் 84%, நடுத்தர வயதினர் 72%, வயதானவர்கள் 60% பேர் ஆதரித்துள்ளனர். இதன்மூலம், அமெரிக்க மக்களிடம் ஒரே பாலின திருமணத்தின் மீதான நாட்டம் அதிகமாகி வருவது தெளிவாகி உள்ளது.

Also Read  அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவிக்கு 2வது திருமணம்

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது இயற்கையான வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள அதிருப்தியே இந்த சதவீத உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்படி இந்தியாவிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமணத்தை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்றும் இதை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது என்றும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாகிவிடும் என்றும் இந்த திருமணத்தில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி முடிவு செய்வது என்றும் இந்த திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் பெரிய குழப்பம் ஏற்படும் என்றும் அதனால், இதை அங்கீகரிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read  கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு!

Tamil Mint

லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

Shanmugapriya

புதிய ஆப்பிள் ஐபோன் அறிமுகம்

Tamil Mint

ரூ.215 கொடுத்து கூகுள் வலைதளத்தை வாங்கிய அர்ஜென்டினா வெப் டிசைனர்…!

Devaraj

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

ஜீன்ஸ் போடக்கூடாது; வடகொரிய இளைஞர்களுக்கு வந்த சோதனை – கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

Tamil Mint

நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்படுவதால் டிரம்பும் பிடனும் வெள்ளை மாளிகைக்கான இறுக்கமான போரில் செல்கின்றன.

Tamil Mint

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj