a

வாட்ஸ் ஆப் வழி எப்படி மின் கட்டணம் அறிவது? முழு விவரம் இதோ…!


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வீடு, தொழிற்சாலை, அலுவலகங்களுக்கு மின்சார கணக்கீடு செய்ய அலுவலர் வருவதில்லை.

இந்நிலையில் பயனாளரே மீட்டரில் காட்டும் யூனிட் அளவு பார்த்து ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் கணக்கிட தெரியாதவர்கள் மீட்டரை போட்டோ எடுத்து அந்தந்த பகுதி உதவி மின் பொறியாளர் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் மின் வாரியம் அறிவித்தது.

Also Read  மின் கட்டணம் செலுத்த இரண்டு மாதத்திற்கு விலக்கு வேண்டும் - சீமான்

பயனர்கள் பலருக்கும் உதவி மின் பொறியாளரின் வாட்ஸ் ஆப் எண் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றபட்சத்தில் இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் எப்படி கணக்கிடுவது என்பதற்கான வழிக்காட்டு நெறிமுறை படிப்படியாக வழங்கப்பட்டுள்ளது.

முதலில் www.tangedco.gov.in என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்

முகப்பு பக்கத்தில் உள்ள REACH US என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்

Also Read  தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

அதில், Contact Information என்பதை தேர்வு செய்ய வேண்டும்

இதையடுத்து Distribution Regions – Director Distribution ஆகிய லின்க்குகளை அடுத்தடுத்து கிளிக் செய்ததும் மண்டலங்கள் காட்டும்

அதில் Chief Engineer / Distribution மற்றும் Superintending Engineer என்ற லிங்கில் உங்கள் மண்டலம் கிளிக் செய்ததும் உதவி மின் பொறியாளர்கள் அலைபேசி எண்கள் வரும்.

அதற்கு பின் உங்கள் மின் அலுவலக உதவி மின் பொறியாளர் அலைபேசி எண், இமெயில் குறித்து வைத்து, மீட்டர் போட்டோவை வாட்ஸ் ஆப் அல்லது மெயிலில் அனுப்பலாம்.

Also Read  11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

அவர்கள் உங்கள் மின் கட்டணத்தை கணக்கிட்டு அனுப்பிய பின் ஆன்லைனில் செலுத்தலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

Tamil Mint

மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

Tamil Mint

பெண் காவலரின் பாலியல் புகார் – நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

sathya suganthi

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

PIPETTE பயன்படுத்த வேண்டாம்…! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…!

Devaraj

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

முடிவுக்கு வருமா காங். பஞ்சாயத்து… சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க நாளை முக்கிய ஆலோசனை

sathya suganthi

திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் – முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

Devaraj

அதிமுகவை சீண்டுவது சுதீஷூக்கு நல்லதல்ல: வைகை செல்வன் எச்சரிக்கை!

Jaya Thilagan

யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

Lekha Shree

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint