கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு…! எப்போது புதைக்கப்பட்டதென ஆய்வு…!


சிவகங்கை மாவட்டம் கீழடியில், கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 6 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இதில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து தற்போது கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கொந்தகையில் நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வின் போது கொந்தகை இடுகாட்டு பகுதியாக கண்டறியப்பட்டது.

மனித எலும்புக்கூடுகள் முதுமக்கள் தாழிகள் கடந்த வருடம் கிடைத்தன

இதனை தொடர்ந்து இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் கொந்தகையில் 2 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி இது வரையிலும் 13 தாழிகள் கிடைத்துள்ளன.

Also Read  20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்அதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.


மேலும் ஒரு குழியில் மேற்புறத்தில் 1 அடி ஆழத்திலே நேற்று வரை 3 எலும்புக் கூடுகள் கிடைத்தன.

மேலும் அதனை தொடர்ந்து அதே குழியில் அதன் அருகே அருகே மேலும் 3 முழு வடிவ மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.இங்கு கிடைத்த மனித எலும்புக் கூடு ஆணா, பெண்ணா மற்றும் எத்தனை வருடம் பழமையானது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறினர்

Also Read  பந்தல், மைக்செட்... களைகட்டும் டாஸ்மாக் கடைகள், குவியும் குடிமகன்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மயிலாப்பூரில் கமல் போட்டி?

Tamil Mint

பொறியியல் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பட்டியல்

Tamil Mint

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் .

Tamil Mint

தமிழகம்: இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்! மாற்றங்கள் என்னென்ன?

Lekha Shree

தமிழகம்: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்!

Lekha Shree

தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்!

Lekha Shree

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

Devaraj

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Lekha Shree

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

sathya suganthi

கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

அரசின் கொரானா விதிகளை காற்றில் பறக்கவிட்ட கமல்ஹாசன், செல்வமணி!

Tamil Mint