காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!


ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் 5 நாள்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அங்கு கிடைத்த தலைமுடியை வைத்து இறந்தது பெண் என கண்டறிந்த போலீசார், பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், இறந்தது புவனேஷ்வரி என்பதும் அவரது கணவரே அந்தப்பெண்ணை கொலை செய்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read  பிச்சை எடுத்து லட்சக்கணக்கில் பணம் சேர்த்த மூதாட்டி - மோடி, கருணாநிதியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்...!

மேலும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி உள்ளார். இவரது கணவர் ஸ்ரீகாந்த். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகிறது. ஸ்ரீகாந்த் தனது மனைவியை வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.

அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.

Also Read  கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி...! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்...!

மருத்துவமனை பகுதியில் வைத்து உடலை எரித்துவிட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் ஸ்ரீகாந்தை மாட்டிக்கொண்டார் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டதற்கு புவனேஷ்வரிக்கு கொரோனா தொற்று இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்துவிடவே மருத்துவமனை நிர்வாகம் உடலை எரித்துவிட்டதாக கூறி உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.

Also Read  உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

பயன்பாட்டில் இல்லாத கொக்கோ கோலா ஆலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய கேரளா!

Shanmugapriya

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள்.

Tamil Mint

ஊரடங்கு காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கிய ஒடிசா அரசு!

Shanmugapriya

நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்…!

sathya suganthi

பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

Tamil Mint

மகனுக்காக தந்தை 300 கி.மீ., பயணம்… ஊரடங்கு காலத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்’:

Tamil Mint

வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

Tamil Mint