’நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன்’…நகைச்சுவையாளர் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை..!


பிரபல மேடை நகைச்சுவையாளரான வீர் தாஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஐ கேம் ஃபரம் டூ இந்தியாஸ்” (i came from two indias) என்ற பெயரில் பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் இருவேறு முகங்கள் குறித்து ஆறு நிமிடம் விளக்கி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “இந்தியாவில் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமானோர் வேலை செய்தாலும், சுமார் 150 ஆண்டுகால பழமையான சிந்தனையை உடைய 75 வயது தலைவர்களின் பேச்சை தான் கேட்க வேண்டியதாக உள்ளது. அதேபோல் இந்தியாவில் பெண்கள் பகல் நேரத்தில் போற்றப்பட்டாலும் கூட்டு பாலியல் வன்முறைகளால் இரவு நேரத்தில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு இருவேறு முகங்கள் கொண்ட இந்தியாவிலிருந்து தான் நான் வருகிறேன்.சைவ உணவு உண்பதை பெருமிதமாகக் கூறிக்கொண்டு, அதேசமயம் அதற்கான காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மீது ஏறிமிதித்துச் செல்லும் இந்தியாவிலிருந்து நான் வருகிறேன். பச்சை (ஜெர்ஸி-பாகிஸ்தான்) அணியுடன் விளையாடும்போது, ஒவ்வொரு முறையும் நீலம் (ஜெர்ஸி-இந்தியா) வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைப்படுகிறோம். ஆனால், பச்சையிடம் தோற்றுவிட்டால் திடீரென நீலம், காவியாக மாறிவிடும் இந்தியாவிலிருந்து வருகிறேன். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், யூதர்கள் என அனைவரும் இருக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன். இப்போது, நாங்கள் அனைவரும் வானத்தை நிமிர்ந்து பார்க்கும்போது, ஒரே விஷயத்தை மட்டுமே பார்க்கிறோம். அது வேறொன்றுமில்லை பெட்ரோல் விலைதான்” என்று வீர் தாஸ் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதனை பார்த்த பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கின்றனர். மேலும் பாஜக செய்தித்தொடர்பாளர் ஆதித்யா ஜா, சொந்த நாட்டை வெளிநாட்டு மண்ணில் சிறுமைப்படுத்தியுள்ளதாக கூறி டெல்லி காவல்நிலையத்தில் வீர் தாஸ் மீது புகார் அளித்துள்ளார்.

Also Read  அரிதான "ரத்த நிலா" - வரும் 26ம் தேதி வானில் தோன்றும்

அதுமட்டுமில்லாமல் ஆதித்யா ஜா “சொந்த தேசத்தை வேறு ஒரு நாட்டில் அவமதிப்பதை சிறிதளவு கூட பொறுத்துக் கொள்ள இயலாது. எனவே வீர் தாஸ்-ஐ கைது செய்யும் வரை தன்னுடைய போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “இது மென்மையான தீவிரவாதம், இப்படிபேசும் கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருக்கிறார்.

Also Read  ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

எதிர்ப்புகள் ஒருபுறமிருந்தாலும், `இதுதான் இன்றைய இந்தியாவின் நிதர்சன நிலை!’ என சக பாலிவுட் நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வீர்தாஸை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வீர் தாஸ் “இந்தியாவை அவமதிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. நான் நையாண்டியாக பேசிய வீடியோ தான் அது. எல்லா தேசத்திலும் நன்மையும் தீமையும், ஒளியும் இருளும் உண்டு. இந்த வீடியோவை தவறாக எண்ணி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் இந்திய நாட்டை சிறப்பிக்கும் வகையிலும், நம் தேசத்தை கண்டு பெருமிதம் கொள்ளும் வகையிலும் அங்கிருந்த அனைவரும் தேச பக்தியுடன் கைதட்டினர். எனவே இந்தியாவை அங்குள்ள மக்கள் நம்பிக்கையுடன் தான் உற்சாகபடுத்துகிறார்கள். நம்முடைய தேசத்திற்கு மதிப்பளிக்கும் மக்களின் கைத்தட்டல் அது. அதனை யாரும் அவமதிப்பாக எண்ண வேண்டாம்” என்று வீர் தாஸ் கூறியுள்ளார்.

Also Read  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பத்மஸ்ரீ விருதை திருப்பி தருகிறேன். ஆனால்…!” – கங்கனா ரனாவத் சவால்..!

Lekha Shree

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

ககன்யான் திட்டத்தின் முதல் வெற்றி: 2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப இலக்கு.!

mani maran

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி

Lekha Shree

“யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்” – தொல்.திருமாவளவன்

Lekha Shree

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! – இது ஒரு நிகழ்ச்சி கதை!

Shanmugapriya

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree