மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றம்! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன் சென்னை திருவொற்றியூரில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாதுகாக்காத போது அந்தப் பெண் பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள் மாமியார் மருமகள் கொடுமை செய்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும் என கூறினர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 80 வயது மாமியாருக்கு 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

Also Read  திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பதவி - அதிரடி காட்டும் தமிழக அரசு

மேலும், அவர் உடனடியாக காவல் நிலையத்தில் சரண் அடைய உத்தரவிட்டனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தேவி என்ற பெண்ணிற்கும் திருவொற்றியூரை சேர்ந்த நபருக்கும் திருமணம் நடைபெற்றது.

தேவிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கணவர் சவுதி அரேபியாவில் பணி செய்து வந்துள்ளார். இதற்கிடையே மாமியார் தினந்தோறும் தேவியை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கணவரை தமிழகத்திற்கு வரும் படி தேவி கூறியுள்ளார். ஆனால் தனது மகன் சவுதி அரேபியாவில் பணி செய்ய வேண்டும் என மாமியார் கூறியுள்ளார்.

Also Read  யார் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்? பண மோசடி வழக்கில் கைதானவர்களின் பின்னணி என்ன?

இதனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சண்டை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் பிறகு, கடுமையான மன உளைச்சலால் தேவி கடந்த 2006ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Also Read  "நான் அந்த வார்டே இல்ல…!" - ஒரே ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

தடுப்பூசி வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint

தமிழகத்தில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு? என்னென்ன கட்டுப்பாடுகள்?

Lekha Shree

10, 12-ம் வகுப்புகளின் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் கோலாகலம்

Tamil Mint

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்..!

Lekha Shree

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

கரூர்: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டைகள்..!

Lekha Shree

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!

Devaraj

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Lekha Shree

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil