சென்னை ஐஐடியில் எறிந்த நிலையில் பிணமாக கிடந்த விஞ்ஞானியின் மகன்…! ஐஐடியில் தொடரும் மர்ம மரணங்கள்…!


கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு, 2021-ஆம் ஆண்டு ஐஐடியில் பிராஜெக்ட் அசோசியெட் படிப்பில் சேர்ந்தார் ஒரு மாணவர். பல கனவுகளுடன் சேர்ந்த அவரது மனது. எதோ ஒரு அழுத்தத்தால் தற்கொலை நோக்கி தள்ளியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஐஐடி மூடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி, ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஐஐடி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டு பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்த போது எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சிடைந்த அவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

Also Read  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது.

Also Read  நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்... : துரைமுருகன் பேட்டி

இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ராகு என்பவரின் மகன் என்பதும் வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு ப்ரோஜெக்ட் வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு, 2021-ஆம் ஆண்டு ஐஐடியில் பிராஜெக்ட் அசோசியெட் படிப்பில் சேர்ந்துள்ளார்.

இதனால், வேளச்சேரியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது அறைக்கு சென்று சோதனை செய்ததில் நான் என்ன செய்கிறேன் என்பதே தெரியவில்லை. மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறேன்.

Also Read  ஆண் தேவதை பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு…!

என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என அவர் எழுதிய கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உன்னிகிருஷ்ணன் இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தொடரும் மர்ம மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

Tamil Mint

காலியாகும் கமல் கட்சி..? மேலும் ஒரு நிர்வாகி விலகல்..

Ramya Tamil

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு!

Tamil Mint

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்.5 முதல் புறநகர் ரயில் சேவை’

Tamil Mint

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Tamil Mint

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

“தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

மெரினாவுக்கு மீண்டும் பூட்டு…? சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்…!

Devaraj

கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

Tamil Mint