அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி


சென்னை ஐஐடியில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை, கல்லூரிகள் திறக்கும்போது கொரோனா பாதிப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது. மேலும் கல்லூரி விடுதி அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Also Read  தமிழகத்தில் அதிகரிக்கும் மது விற்பனையை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்…!

இந்நிலையில் சென்னை ஐஐடியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஐஐடி வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணைஆணையர் ஆல்பின் ஜான்வர்கிஸ், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

Also Read  தமிழக பட்ஜெட் 2021 - 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிப்பு..!

இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி சீரான இடைவெளியில் அனைத்து கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  சென்னை: 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று ஒரே நாளில் 1,668 பேருக்கு கொரோனா.!

suma lekha

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Lekha Shree

ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

மின்வாரியத்துறை தனியார் மயமாக்கப்படும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி

Tamil Mint

“படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?” – நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

Lekha Shree

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

Tamil Mint

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Tamil Mint