பணத்தை பதுக்கவே செய்யப்பட்ட பைப்புகள்…! வசமாக சிக்கிய பொறியாளர்..!


கர்நாடகாவில் அதிகாரி ஒருவர் வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாயில் பதுக்கி வைத்திருந்த ரூ. 6 லட்சம் பணத்தை ஊழல் தடுப்புப் பிரிவினர் பக்கெட்டுகள் மூலம் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகாவில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் லஞ்சம் மூலமாக கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து 15 அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. 400 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

கதக் மாவட்டத்தில் வேளாண் துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பார் வீட்டில் ரூ. 3.6 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.15 லட்சம் ரொக்கமும் சிக்கியது. மேலும் சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களும் சிக்கின.

Also Read  கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை!

தொட்டபள்ளாபூர் வருவாய் ஆய்வாளர் லட்சுமி நரசிம்மா வீட்டில் 4.8 கிலோ தங்கமும் 16 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், குல்பர்காவில் பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் சாந்தனு கவுடாவின் வீட்டில் நடந்த சோதனையில் 3 கிலோ தங்கமும் ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களும் சிக்கின.

Also Read  தடுப்பூசியை பிரதமர் மோடி முதலில் போட்டுக்கொள்ள வேண்டும் - எம்.பி., தயாநிதி மாறன்!

மேலும், அவரது வீட்டின் மாடியில் சோதனை நடத்தியபோது ஓடுகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் வீட்டுக்குப் பின்னால் இருந்த தண்ணீர் குழாயில் ரூ. 6 லட்சம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

Also Read  சிவசங்கர்பாபாவின் ஆபாச இமெயில் சாட்டிங்...! பலே ஆதாரம் சிக்கியதால் இமெயில் முடக்கம்...!

அதை அதிகாரிகள் நீளமான குச்சியில் குத்தி பக்கெட்டுகளில் பறிமுதல் செய்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசிக்கு காத்திருக்கும் 70 சதவீத மக்கள்…! ஹெர்டு இம்யூனிட்டி பெற 3.5 ஆண்டுகள் ஆகலாம்…!

sathya suganthi

மக்களே உஷார்: போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துகளை பரிசளிக்கிறார் பிரதமர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

mani maran

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

“குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்” -83 பேர் மீது வழக்குப்பதிவு

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree

இந்திய வீரர்கள் கடைசி போட்டியில் கருப்பு பட்டை : காரணம் இதுதான்

suma lekha

மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது – ஸ்டாலின்

Lekha Shree

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj

வெண்பனியால் மூடப்பட்ட இமாச்சலப் பிரதேசம்…! ஏக்கத்துடன் பெருமூச்சி விடும் சென்னை வாசிகள்…!

Devaraj