a

“பதஞ்சலி” ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்


யோகா குரு என்றழைக்கப்படும் ராம்தேவ், பதஞ்சலி நிறுவனம் மூலம் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

இவர் கொரோனா வைரசை தடுக்கும் என்று எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாத கொரோனாநில் என்ற மருந்து பொருளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி சிகிச்சை முறையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும். இது சிகிச்சை அளிக்கப்படாதது அல்லது ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்தவர்களை விட அதிகம் என்றும் கூறியிருந்தார். அலோபதி முட்டாள்தனமான மற்றும் தோல்வியடைந்த சிகிச்சை முறை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

முட்டாள்தனமான அறிவியல் மற்றும் மருந்துகள் குறிப்பாக ரெம்டெசிவிர், ஃபவிப்ளூ மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அனுமதிக்கப்பட்ட பிற மருந்துகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தோல்வியடைந்து விட்டன என்றும் அவர் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்..! விமானத்தில் டன் கணக்கில் வந்தடைந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்…!

ராம்தேவின் இந்த கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ராம்தேவ் மீது பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ‘அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது’ என்று கூறிய ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராம்தேவ் தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Also Read  பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் சிவன், குவியும் வாழ்த்துகள்

Tamil Mint

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi

பிரபல நடிகர் திடீர் மரணம்

Tamil Mint

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்…!

Lekha Shree

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil