a

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..


இந்தியா தற்போது கொரோனாவின் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது..

நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை..

Also Read  காதலியை மணந்த அதிமுக எம்எல்ஏ

இதே போல் தமிழகத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.. கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்து பதிவாகி வருகிறது..

இந்த சூழலில் வரும் 6-ம் தேதி முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  தூக்கத்தில் சுவாசப் பிரச்சனையா...? கொரோனாவால் ஆபத்து…! மருத்துவ ஆய்வில் தகவல்...!

இத்தகைய சூழலில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் ‘தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால், உடனடியாக தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  “கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

தமிழக வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!

Tamil Mint

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

Lekha Shree

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரானா

Tamil Mint

ஆஸ்துமா நோயாளிகள் முகக்கவசம் அணியலாமா? – மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

Shanmugapriya

கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு!

Shanmugapriya

“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை”

Tamil Mint

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

புகாரை வாபஸ் வாங்கிக்கொண்ட தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்கள்: ஈபிஎஸ் காட்டில் மழை

Tamil Mint

“சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான்” -டிடிவி.தினகரன்

Devaraj

சரத்குமார் பெயரில் மோசடி, போலீசில் புகார்

Tamil Mint