பெகாசஸ் விவகாரம் – 10 பிரதமர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!


பெகாசஸ் விவகாரம் இந்தியாவை அதிரவைத்த நிலையில் உலக அளவிலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உளவு செயலியின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதமர்கள், 3 அதிபர்கள், ஒரு நாட்டின் மன்னர் உட்பட பலர் உளவு பார்க்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் அமைச்சர்கள் உள்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதால் பிரான்ஸ் அரசு தனி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா ஆகியோரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read  அமேரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்....

இவர்களின் செல்போன்கள் எப்படி இலக்கானது என்ற விவரம் தெரியவில்லை. பொது வெளியிலும் செய்தியாளர்கள் மூலமும் அரசு செய்திக் குறிப்புகளில் வெளியான இவர்களின் செல்போன் எங்கள் மூலமாக இவர்கள் உளவு பார்க்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

Also Read  ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை ரூ.35 ஆயிரமா?

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இந்த பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது பல உலக நாடுகளிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  அடேங்கப்பா…. ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

அமெரிக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி… ஜோ பைடனின் பலே திட்டம்!

Tamil Mint

ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! – கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

Tamil Mint

பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?

Tamil Mint

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

Tamil Mint

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

ஒன்றரை ஆண்டுகள் கழித்து தாயைப் பார்த்த மகள்! – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ!

Tamil Mint

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint