a

உயர்கல்வி : மாணவியர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 2வது இடம்…!


இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி குறித்த ஆய்வின் அறிக்கையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் நாடு முழுவதும் உயர்கல்வியின் தற்போதைய நிலவரம் மீதான முக்கிய செயல்திறன் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இந்தக் காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2 சதவீதம் அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014-15 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 24.3 சதவீதமாக இருந்ததாகவும், 2019-20ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பீகாரில் 53.51 சதவிதம் வாக்கு பதிவு

2014-15 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சமாகவும், 2019-20ஆம் ஆண்டில் 3 கோடியே 85 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரமாக இருந்த நிலையில், 2019-20ம் ஆண்டில் அது 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

கடந்த, 2019 – 20ம் கல்வி ஆண்டில், தேசிய அளவிலான கல்வி மையங்களில், உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை 24.7 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரை, உயர்கல்வி மாணவ – மாணவியர் சேர்க்கையில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மாணவியர் சேர்க்கையில் மட்டும் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Also Read  கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!

Tamil Mint

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

போலி ரெம்டெஸிவிர் மருந்துகளால் கொரோனாவில் இருந்து மீண்ட 90% நோயாளிகள்…!

Lekha Shree

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

இந்தியா – ஓய்கிறதா கொரோனா அலை? இன்றைய கொரோனா அப்டேட்!

Lekha Shree

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

Lekha Shree