a

ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு


மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழை சம்பந்தப்பட்ட ஓய்வூதிய வழங்கல் அலுவலரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் வழங்க வேண்டும்

மேலும், அப்படி யாரும் உயிர்வாழ் சான்றிதழை வழங்காவிட்டால் அவர் நேரில் ஆஜராகும்படி அக்டோபர் மாதம் அந்த அலுவலர் அழைப்பு விடுப்பார். அப்போதும் நேரில் ஆஜராகாவிட்டாலோ அல்லது உயிர்வாழ் சான்றிதழை வழங்காவிட்டாலோ, நவம்பர் மாதத்தில் இருந்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படுவது வழக்கம்.

Also Read  திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பதவி - அதிரடி காட்டும் தமிழக அரசு

ஆனால் கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு, ஆண்டு தோறும் நடத்தப்படும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிற்கும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில், கொரோனா பரவும் சூழலில், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை வாங்கும் பணியை மேற்கொண்டால், ஏற்கனவே வயதாகியதால் உள்ள சிரமங்களுடன் தொற்றும் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது என்றும் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றும் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் ஆணையர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ: பரபரப்பு தகவல்கள்!

மேலும், ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கோ அல்லது ‘ஜீவன் பிரம்மான் போர்டெல்’ மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை பெறும் பணிகளுக்கோ விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2021-ம் ஆண்டிற்கும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கும், ‘ஜீவன் பிரம்மான் போர்டெல்’ மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை அனுப்புவதற்கும் தற்காலிகமாக விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிடுகிறது.

Also Read  பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்” – சி.ஆர். சரஸ்வதி

Lekha Shree

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

“எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி” – அண்ணாமலை திட்டவட்டம்!

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலினின் 6 அறிவிப்புகள் என்னென்ன?

Lekha Shree

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! ஒரே நாளில் 197 பேர் பலி…!

Lekha Shree

யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

கொரோனா அப்டேட் – சென்னையில் குறையும் தொற்று பாதிப்பு…!

Lekha Shree

சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

Devaraj

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree