சுதந்திரம் குறித்த சர்ச்சை கருத்து… சிக்கலில் கங்கனாவின் பத்மஸ்ரீ விருது?


இந்தியாவின் சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என சில முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அண்மையில் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா, “பிரிட்டிஷாரின் நீட்சிதான் காங்கிரஸ். 1947-ல் பெற்றது சுதந்திரம் அல்லது பிச்சை. 2014ல் தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. பிச்சையெடுத்து சுதந்திரம் வந்தால் அது உண்மையான சுதந்திரமாக இருக்க முடியுமா?” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read  "5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது ஓயவில்லை" - பிரஷாந்த் கிஷோர் ஆவேசம்!

பலரும் கங்கானாவை கைது செய்யவேண்டும் என்று கூறி கடும் கண்டனங்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட்டு வருவதால் கங்கனாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், “இந்த மூர்க்கத்தனமான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுகிறது. மகாத்மா காந்தி, நேரு மற்றும் சர்தார் படேல் தலைமையிலான சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையிலும் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற பல புரட்சியாளர்களின் தியாகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் கங்கனாவின் கருத்து அமைந்துள்ளது.

எனவே, அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது திரும்பப் பெற வேண்டுமென்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.

Also Read  "மகன் இறந்த போதே பாதி இறந்துவிட்டார்!" - நடிகர் விவேக்கின் மறைவிற்கு கதறும் நண்பர்கள்!

இது போன்ற விருதுகளை வழங்குவதற்கு முன் விருது பெறுபவர்களின் மனநலத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இதுபோன்ற நபர்கள் நமது தேசத்தையும் நமது மாவீரர்களை அவமதிக்க மாட்டார்கள்” என கூறியுள்ளார்.

இவரைப்போல ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி, சிவசேனா தலைவர் நீலம் கோர்ஹே போன்றோரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Also Read  லக்கிம்பூர் சம்பவம்: போலீசில் ஆஜரான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா..!

இதில் நீலம் கோர்ஹே கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

தேவாங்கர் செட்டியார் சங்கக் கூட்டம் – ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு திரட்டிய மகன்…!

Devaraj

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

Lekha Shree

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…!

suma lekha

பேட்டிங்கில் இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டிய முகம்மது ஷமி, பும்ரா: அடேங்கப்பா.. அட்டகாச ஆட்டம்.!

mani maran

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் டிராவிட்? ரவி சாஸ்திரியை விட கூடுதல் சம்பளம்?

Lekha Shree

வலிமை வில்லன் கார்த்திகேயாவுக்கு திருமணம்.!

suma lekha

ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் மேன்செஸ்டர் யுனைடெட்?

Lekha Shree

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு முறை?- முழு விவரம்

sathya suganthi

NET தேர்வுக்கு இணையத்தில் செப்டம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்!

suma lekha