a

2 ஓட்டு வாங்கிய அந்த 3 பேர்…! வரலாற்று சாதனை படைத்த கரூர் வேட்பாளர்கள்…!


ஒவ்வொரு தேர்தலிலும் நூற்றுக்கணக்கானோர் சுயேட்சையாக போட்டியிட்டாலும் ஒரு சில வேட்பாளர்களே களத்தில் நின்று விளையாடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

தனி நபர் செல்வாக்கை பயன்படுத்தி ஓட்டுக்களை பிரித்து பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை கூட கவிழ்க்கும் சக்தியாக சுயேட்சை வேட்பாளர்கள் இருப்பார்கள்.

அதே சமயம், ஒரு சில சுயேட்சை வேட்பாளர்களுக்கு சொந்த குடும்பத்தினர் கூட வாக்களிக்காத நிலையும் அரங்கேறுவது உண்டு.

இதனால் சொற்ப வாக்குகளுடன் டெபாசிட் பணத்தை இழந்து போகும் சம்பவம் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அதிலும் ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் வாங்குவது கொடுமையோ கொடுமை.

Also Read  21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

அந்த வகையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் மட்டும் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியவர்கள் அதிகமாக உள்ளனர்.

அந்தத் தொகுதியில் மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களம் கண்டனர். இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 19 பேர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியுள்ளனர்.

Also Read  ஹெலிகாப்டரில் வந்த கமல்... பார்க்க குவிந்த மக்கள்!

அதிலும் குறிப்பாக சக்திகுமார், செந்தில்குமார், மணிகண்டன் என 3 பேர், தலா இரண்டு ஓட்டுக்கள் மட்டுமே வாங்கி புதிய சாதனை புரிந்துள்ளனர்.

புஷ்பராஜ், மணிவண்ணன் என இரண்டு பேர், தலா மூன்று ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். இதுதவிர மற்றவர்கள் 10க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.

Also Read  "தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது" - இயக்குனர் சேரன்

அதேபோன்று துறைமுகம் தொகுதியிலும் நாகராஜ், மகாலிங்கம் என இரண்டு பேர், தலா 10 ஓட்டுக்கள் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “இந்தி ஆலோசனை குழுவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இடம் பிடித்துள்ளார்.

Tamil Mint

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்: ரஜினியின் திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன?

Tamil Mint

வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – மு.க.ஸ்டாலின்

Devaraj

தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

20 இடங்களிலும் வெல்வோம்: எல்.முருகன் நம்பிக்கை

Devaraj

செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Mint

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார்: பிரேமலதா விஜயகாந்த்

Tamil Mint

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..?

Tamil Mint

கோவையில் மற்றுமொரு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி…!

Devaraj

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை

Tamil Mint

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint