வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்


கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

கேரள மாநிலம் திருப்பூணித்துறையில் பிறந்த டி.என். கிருஷ்ணன் தனது இளம்வயதில் அதாவது 1940 களில் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். சிறு வயது முதலே வயலின் இசை மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரிடம் இசைப் பயிற்சி பெற்றார்.

Also Read  கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இளம் வயதிலேயே புகழ் வாய்ந்த பாடகர்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.டி.ராமநாதன், ஆலத்தூர் சகோதரர்கள் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அதன் பின்னர் தனியாக வயலின் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இதனிடையே, சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கலைப் பள்ளியின் முதல்வராக பணியாற்றினார். இவரது சாதனையை பாராட்டி 2006-ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதெமி விருது அளிக்கப்பட்டது.

Also Read  பெங்களூரு விபத்து: திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

மேலும் சங்கீத கலாநிதி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு மத்திய அரசு “பத்மவிபூஷண்’ விருது அளித்து கௌரவப்படுத்தியது.

இந்த நிலையில் டி.என். கிருஷ்ணன் கடந்த சில காலமாக வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி - சர்ச்சை தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

Shanmugapriya

ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

Tamil Mint

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

உத்தரபிரதேசத்தில் தேர்வு செஞ்சி சென்னைல வேலை கொடுப்பீங்களா: ஆவேசமான எம்.பி.

mani maran

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

mani maran

கேரளா: சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி! சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம்! உறவினர்கள் கதறல்..!

Lekha Shree

அகில இந்து சமய மாடாதி தூக்கிட்டு தற்கொலை… உ.பி.,யில் பரபரப்பு..!

suma lekha