டோனி சாப்பிட்ட ஹாலில் இராணுவ ஆஸ்பத்திரியா நெட்டிசன் விமர்சனத்தில் சிக்கிய மோடி..


[rt_reading_time label=”” postfix=”minutes read” postfix_singular=”minute read”]

‘ஊர்ல கல்யாணம்னா மார்ல சந்தனம்’ அப்படின்னு கிராமங்களின் ஒரு பழமொழி இருக்கிறது. அப்படி பிரதமர் மோடி எதை செய்தாலும் அதை தாங்களே செய்தது போல தூக்கி பிடித்து கொண்டாடும் ஓரு கூட்டம் இருப்பதுபோல பிரதமர் மோடி எதை செய்தாலும் அதில் உள்ள குறைகளை கண்டுபிடித்து கமெண்ட்களாகவும், மீம்ஸ்களாகவும் சமூக வலைகளங்களில் கலாய்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போது நெட்டிசன்களின் பயங்கர கலகலப்பு கலாய்ப்பில் சிக்கியிருப்பது பிரதமர் மோடியின் லடாக் பயணமும், குறிப்பாக அங்கே கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு காயம் பட்ட நமது ராணுவ வீரர்களை அவர்கள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு சென்று பிரதமர்மோடி சந்தித்தாக வெளியான புகைப்படங்கள்தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பிரதம் மோடியின் இந்த லடாக் பயணத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் ஆஸ்பத்தரி விசிட்டில் லடாக்கில் காயம்பட்ட ராணுவ வீரர்களை சந்தித்த அறையும், அங்கே சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர்களும்தான்… காரணம், இந்த அறையே படம் பிடிப்பதற்காக அவசர அவசரமாக செட் செய்ப்பட்டது என்றும், ராணுவ வீரர்களின் கான்பரன்ஸ் அறையை அவசர ஆஸ்பத்திரியாக செட் செய்து அங்கே படுக்கை வசதிகள் செய்யப்பட்டு பிரதமர் விசிட் பக்காவாக படம் பிடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Also Read  குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்! குவியும் வாழ்த்து...

இந்த சர்ச்சைக்கு காரணம் இல்லாமல் இல்லை… சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் தோனி இதே கான்பரன்ஸ் அறையில் உணவு சாப்பிடுவதுபோல படங்கள் வெளியானது. இப்போது அதே அறை… அதே அறை ஜன்னல் திரைச்சீலைகள்… கான்பரஸ் ஹாலில் உள்ள மெகா ஸ்கிரீன்… புரொஜக்டர் கருவி என இவை எல்லாம் அப்படியே இருக்க… இப்போது மோடிக்காக சில படுக்கைகளும் அதன் மேலே சிகிச்சையில் இருக்கும் ராணுவ வீரர்களும் மட்டும் புதுசு…

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையை மறைத்து வருகிறார் என்று ஆரம்பம் முதலே காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகிறது. அதோடு, 20 இராணுவ வீரர்கள் பலியான நிலையில் சீன படை நமது மண்ணுக்கள் ஊடுருவ வில்லை என்று தொடர்ந்து பிரதமர் மோடி கூறி வருவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ள வைக்கவே பிரதமர் மோடி திடீரென லடாக் பயணப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Also Read  பரிதாப நிலையில் காட்டுயானைகள்... தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை... இதற்காக ரயில்வே துறை என்ன செய்தது...?

அப்படி போன இடத்தில் விளம்பரத்திற்காக ராணுவ வீரர்களை ஆஸ்பத்திரியில் பார்ப்பதுபோல படம் பிடித்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடியை நோக்கி நெட்டிசன்களின் கலாய்ப்பு கமெண்ட்கள் இணையம் முழுதும் பரவி கிடக்கிறது.

இப்படி நெட்டிசன்கள் கலாய்ப்பு இருந்தாலும் அந்த விசிட் படங்களை பார்க்கிற பலருக்கும் பல சந்தேகங்கள் எழும்பும்…. படுக்கையில் இருக்கிற யாருக்கு பக்கத்திலும் வழக்கமா இருக்கும் குளுகோஸ் ஏற்றும் ஸ்டாண்டோ, காயம் ஏற்பட்டு போடப்பட்ட கட்டுக்களோ இல்லை. இப்படி பல விஷயங்களை பார்த்து பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Also Read  அரசு ஊழியருகே இந்த நிலையா...! பெண்ணின் விஸ்வரூபம்... நடந்தது என்ன....?

இராணுவ நடவடிக்கைகள் செய்வதில் கூட ஏன் இந்த விளம்பர ஷூட்டிங் என்கிறார்கள் இந்த விவரம் அறிந்தவர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

Tamil Mint

“வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்!” – முதல்வர் பழனிசாமி

Shanmugapriya

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tamil Mint

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எண்ணி எலுமிச்சை சாறை மூக்கில் விட்ட ஆசிரியர் பலி!

Shanmugapriya

மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை! – காரிலேயே உயிரிழந்த பெண்!

Shanmugapriya

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

கணவன் பேச்சை நிறுத்தியதால் தன் பேச்சை நிறுத்திய மனைவி

VIGNESH PERUMAL

ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியல்: முதலிடம் பிடித்து மிதாலி ராஜ் சாதனை!

suma lekha

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil

25வது நாள் கொண்டாடும்‘மாஸ்டர்’… ஒட்டுமொத்த வசூல் நிலவரம் எத்தனை கோடி தெரியுமா?

Tamil Mint

மருத்துவமனையில் தவறாக நடந்துகொண்ட ஊழியர்… அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

VIGNESH PERUMAL

கொரோனா பரவல் எதிரொலி: கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து.

mani maran