கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்


கேரளாவில்  16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

 

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன்,இந்த குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை சரிந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும்.

Also Read  280 நிறுவனங்கள் திவால்...! - மத்திய அமைச்சர் தகவல்

 

இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளம் உள்ளது.

 

நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகிப்பதை ஒருங்கிணைப்பார்கள். 

Also Read  "மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே" மோடிக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!

 

குறைந்தபட்ச விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் விவசாயத் துறையின் பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோகச் சங்கிலி செயல்முறைகளையும் அமைக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது” என்று விஜயன் மேலும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய வீடியோ – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!

sathya suganthi

4 இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி கட்ட முடிவெடுத்த கிராம மக்கள்!

Shanmugapriya

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! – எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

Bhuvaneshwari Velmurugan

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

”DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” – நிர்மலா சீதாராமன்!

suma lekha

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் போட்ட 14 பேர் கைது!

suma lekha