வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி


இந்திய ராணுவ வீரர்களுக்கு என்று செய்தி அனுப்பும் பிரத்யேகமாக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

 

வாட்ஸ்-அப் போன்றே செயல்படக்கூடிய, ‘செக்யூர் அப்ளிகேஷன் பார் தி இன்டர்நெட்’ (சாய்) என்னும் பெயர் கொண்ட ஒரு பாதுகாப்பான தகவல் செயலியை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.. தமிழிசை எச்சரிக்கை..

 

இணையத்தில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் வழியாக குரல், எழுத்து மற்றும்வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முடியும். தற்போது எளிதாக கிடைக்கக்கூடிய வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளைப் போன்றே, துவக்கம் முதல் இறுதி வரை பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் என்பதை இந்த செயலியும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் நமக்கு ஏற்ற வகையில் பயன்படக்கூடிய முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.

 

Also Read  இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள்.

ராணுவ சைபர் பிரிவு மற்றும் ‘சேர்ட்-இன்’ குழுவில் உள்ள சிறப்புத் தணிக்கையாளரால் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கண்டுபிடிப்பிற்கு அறிவுசார் சொத்துரிமை கோரி விண்ணப்பித்தல், தகுந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட இதர இயங்கு தளங்களில் செயல்படும் வகையில் வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Also Read  சைதாபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம் - சந்தேகப்பட்ட நபர் தற்கொலை? ஹைதரபாத்தில் பரபரப்பு..!

 

இந்த செயலி மூலம் இனி நாடு தழுவிய வகையில் ராணுவ வீரர்களுக்கான தகவல் பரிமாற்றம் முழுமையாக நடைபெறும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!

Lekha Shree

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

விஸ்டாரா ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு தொடரும்: விஸ்டாரா நிறுவனம்

Tamil Mint

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் – காரணம் இதுதான்…!

sathya suganthi

ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை திரட்ட பா.ஜ.க முடிவு

Tamil Mint

கண்ணிவெடிகளை கண்டறியும் எலிக்கு ஓய்வு வழங்க அரசு முடிவு!

Shanmugapriya

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

“வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!” – மத்திய அரசு

Lekha Shree