மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை!


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும்  2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்தது. மயங் அகர்வால் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மீண்டும் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஷுப்மன் கில் 45 ரன்களில் வெளியேறினார்.

Also Read  தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பண்ட் - சொல்கிறார் பர்தீவ் பட்டேல்

அதன்பின் களமிறங்கிய விஹாரி 21 ரன்களிலும் ரிஷப் பேண்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தற்பொழுது ரஹானே (57 ரன்கள்) மற்றும் ஜடேஜா (9 ரன்கள்) எடுத்து களத்தில் உள்ளனர். ரஹானே இந்த ஆட்டத்தில் அரை சத்தம் கடந்துள்ளார். இந்திய அணி 68.3 ஓவர்கள் விளையாடி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. 

Also Read  அடுத்த வருட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்..? அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை அணி !!

அடிலெய்டில் அடைந்த தோல்விக்கு மெல்பர்னில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

என்ன ஆச்சு பெடரருக்கு? – கத்தார் ஓபனில் அதிர்ச்சி தோல்வி!

Jaya Thilagan

இஷான் கிஷன், கோலி அதிரடி! – இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்த இந்தியா!

Lekha Shree

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான வீரர்கள் விவரத்தை அறிவித்தது பிசிசிஐ:

Tamil Mint

டெஸ்டிற்கு அதிக முக்கியத்துவம் – உண்மையை போட்டு உடைத்த புவி

HariHara Suthan

உலக கோப்பைகான இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு? இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க போட்டா போட்டி!

HariHara Suthan

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan

ஐசிசி தரவரிசை – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

Devaraj

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – ஐபிஎல் க்கு தடை வராது என கங்குலி உத்தரவாதம்!

Jaya Thilagan

டெஸ்ட் கிரிக்கெட்டின் அசல் ஆட்டம் இது – விராட் கோலி

Tamil Mint

4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

Lekha Shree