மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா


மெல்பர்னில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்படுகிறார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இன்று (டிசம்பர் 26) காலை 5 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே 3 விக்கெட்டுகளை இழந்தது.

Also Read  "சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆஸ்திரேலியா சார்பில் களம் இறங்கிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டக் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 39 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் எடுத்தார். 

இந்தியா சார்பாக பந்து வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா ஆறு ஓவர்களை வீசி ஆறு ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ஜோ பேர்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அதே போல ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று ஓவர்களை வீசி வெறும் ஏழு ரன்களை விட்டுக் கொடுத்து மேத்யூ வேட் மற்றும் ஸ்டீவென் ஸ்மித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Read  எல்லாம் சரிதான் ஆனால் நாட்டுக்காக விளையாடுறது ரொம்ப முக்கியம் பாஸ் - இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட்!

மேலும் இந்திய அணி வீரர்கள் பும்ரா 4, அஷ்வின் 3, முகமது சிராஜ் , ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 

இந்திய அணி சார்பில் நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகிய தமிழக வீரர்கள் களம் இறங்கவில்லை.

தற்பொழுது இந்திய அணி விளையாட களமிறங்கியுள்ளது. மயங் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார். 

இன்றைய ஆட்டத்தில் 11 ஓவர்களுக்கு இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. 

Also Read  பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

இதற்கு முன்பு அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் அப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய 36 ருங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லவ்லினா பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியை காண அசாம் சட்டப்பேரவை ஒத்திவைப்பு.!

suma lekha

கேப்டன்சியிலிருந்து விலகும் விராட் கோலி? அடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாவா?

Lekha Shree

நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் – பெடரர் சாதனை முறியடிப்பு!

Jaya Thilagan

லீட்ஸ் டெஸ்ட் போட்டி: சரிவை சரிகட்டும் இந்தியா!

suma lekha

“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – அதிரடி காட்டிய பீட்டர்சன்!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: சதம் விளாசி அசத்திய அஸ்வின்… இங்கிலாந்துக்கு 476 ரன்கள் இலக்கு!

Tamil Mint

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புது மாப்பிள்ளை ஜஸ்பிரித் பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Jaya Thilagan

வித்தியாசமான பௌலிங் ஆக்சன் – வியந்துபோன ஹர்பஜன் சிங்

Jaya Thilagan

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!

Devaraj

வரலாற்றை நினைவுகூரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்..! ஏன் தெரியுமா?

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Lekha Shree

கால்பந்து: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி…!

Lekha Shree