இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.


இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 27 ஆம் தேதி, சிட்னி மைதானத்தில் தொடங்கியது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதினர். 

காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்த தொடரில் பங்கேற்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி வென்றது. 

இப்போட்டிகளில் வென்றது மூலம் அந்த தொடரிலும் வெற்றி பெற்றது. 

இந்தியா ஆறுதல் வெற்றியை நோக்கி மூன்றாவது ஒரு நாள் போட்டியில் களமிறங்கியது. 

இன்று நடைபெற்ற தொடரில் பந்துவீச்சாளர், நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் இன்று களமிறக்கப்பட்டார்.

இதன்மூலம் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று அறிமுகமானார் நடராஜன். 

Also Read  ஐபிஎல் 2021: "எங்கள் வழி தனி வழி..!" - மும்பையை வீழ்த்தியது குறித்து கொல்கத்தா கேப்டன் பெருமிதம்..!

நடராஜன் தமிழ்நாட்டின் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2014-15 ரஞ்சி கோப்பையில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து 2017 ஐபிஎல்லில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடினர்.

மேலும் 2018 ஐபிஎல்லில் சன்ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

அதில் அவரது திறமையான பந்துவீச்சினால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். 

முதல் இரண்டு போட்டியில் அவர் பங்குபெறவில்லை. மூன்றாவது போட்டியில் சைனிக்கு பதிலாக  நடராஜன் விளையாடினார். தனது முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

கான்பெர்ராவில் நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை தாம் வீசிய ஓவரில் வீழ்த்தினார் நடராஜன். 

29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்தியா இன்று விளையாடிய இறுதி போட்டியில் 303 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. 

Also Read  முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மொத்த விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது.

இந்திய அணி இறுதிப்போட்டியை வென்றிருந்தாலும் இரண்டு போட்டிகளில் ஏற்கெனவே வென்றதால் இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இப்போட்டியில், ஒரு நாள் தொடரில் விரைவாக 12,000 ரன்கள் குவித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்ட பிசிசிஐ!

Lekha Shree

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

விரைவில் சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி..!

Lekha Shree

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

‘தலைதூக்கும் தீண்டாமை..!’ – பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் பெற்றோருக்கு அபராதம்..!

Lekha Shree

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போகிறவரா நீங்கள் ??? உங்களுக்கான செக் இதோ

Tamil Mint

“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்

Lekha Shree

ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கட் மூலம் இமெயில் ஐடி திருட்டு – மத்திய அரசு எச்சரிக்கை

sathya suganthi

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree