இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது; ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார் பிரித்வி ஷா!


ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி,  20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் இன்று நடக்கிறது.  

Also Read  டோக்யோ ஒலிம்பிக்: இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவன் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.  பகல்-இரவு பயிற்சி கிரிக்கெட்டில் 73 பந்துகளில் சதம் விளாசிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மற்றும் அரைசதம் அடித்த சுப்மான் கில் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. 

தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்தை மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஜோடி தக்க வைத்துள்ளது. விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹாவும், ஒரே சுழற்பந்து வீச்சாளராக அஸ்வினும் களம் இறங்குகி இருக்கிறார்கள்.

Also Read  ரோஹித், ஷ்ரேயாஸ்க்கு காயம் - கதி கலங்கும் ஐபிஎல் அணிகள்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய  பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்தியா 25 ஓவர்களில்  41 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

கோலி, புஜாரா ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் தான் 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது. அதே போல் இன்றும் வெற்றியை நிலைநாட்டுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also Read  சச்சின்,லாரா நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே தரலாம்! கலாய்த்த யுவராஜ் சிங்..வைரல் வீடியோ இதோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

Devaraj

நியூசிலாந்திடம் மூன்று நாட்களுக்குள் இந்தியா தோல்வியை தழுவிய போது ஆடுகளத்தை குறித்து யாருமே வாய் திறக்காதது ஏன் – இந்திய அணி கேப்டன் விராட் கோலி சரமாரி கேள்வி

Jaya Thilagan

“இலங்கைக்கு எதிரான வெற்றி அபாரமானது!” – சச்சின் டெண்டுல்கர்

Lekha Shree

ஐபிஎல் 2021: அறிமுக தொடரிலேயே சாதனை படைத்த உம்ரான் மாலிக்..!

Lekha Shree

சூரியகுமார் யாதவுக்கு ஆதரவு குரல் கொடுத்த கௌதம் கம்பீர்!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்… களத்தில் நின்று ஆடும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

Tamil Mint

ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

Lekha Shree

இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்…!

Devaraj

6 பால் 6 சிக்ஸ் – இலங்கையை போட்டுத் தாக்கிய போலார்ட்!

Jaya Thilagan

ஆட்டத்துக்கு ரெடியா? அதிரடியாக கேட்கும் அஸ்வின் ரவிச்சந்திரன்

Tamil Mint

மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..! சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை..!

suma lekha

உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? – ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

Lekha Shree