முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு


இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்திய அணிப் பட்டியலில் துவக்க வீரராக ப்ரித்வி ஷாவை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பயிற்சிப் போட்டியில் நன்றாக செயல்படாத ப்ரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Also Read  ஐபில் ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஆஸ்திரேலியா அணியில் சேர்ப்பு!

சிறந்த அனுபவ விக்கெட் கீப்பர் என்ற முறையில் விரிதிமான் சாஹாவுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு இடம் அளிக்காதது சில ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. 

அதே போல, நல்ல பார்மில் இருக்கும் கேஎல் ராகுலுக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என கருதப்பட்ட ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் என சமீபத்தில் தங்கள் திறமையை நிரூபித்த வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. 

Also Read  டோக்யோ ஒலிம்பிக்: இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் மற்றும் சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை.

முதல் டெஸ்டில் ஆட உள்ள இந்திய அணி பட்டியலில், மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Also Read  அப்போ ஃபில்டிங்.. இப்போ பேட்டிங்... களத்தில் ஆட்டம் காட்டிய ரசிகர்

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2021 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு… களத்தில் இறங்கும் சிஎஸ்கே… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டி – ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!

Devaraj

மாற்று வீரர்களை வாங்க முடியாமல் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு அபராதம்… காரணம் என்ன?

suma lekha

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்று பெற்ற இந்தியா…! 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ…!

Tamil Mint

தப்பு பண்ணிட்டியே பட்லரு.. நீ ஷமியை தொட்டிருக்க கூடாது: இங்கிலாந்து அணியை வச்சி செய்த இந்திய அணி.!

mani maran

121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

Tamil Mint

ஐபிஎல் 2022: புதிதாக 2 அணிகள் சேர்க்கும் திட்டம்… ரூ.5,000 கோடி வருமானம் ஈட்டும் பிசிசிஐ?

Lekha Shree

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Tamil Mint