இந்தியா – வங்காளதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


இந்தியா மற்றும் வங்காளதேசம் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. 

கொரோனா  பெருந்தொற்று காலத்தில் இரு நாட்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு  இன்று நடைபெற்றது.

Also Read  RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு.

இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு  பின்னர் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று , பிரதமர் நரேந்திர மோடியும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்துள்ளனர். மேலும் வங்காளதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவு தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

Also Read  தவறுதலான ஹேர்கட்… பிரபல நட்சத்திர ஓட்டல் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு..!

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, “வங்காள தேசம்  ஒரு சுதந்திர தேசமாக 50 ஆண்டுகளைக் கொண்டாடும் முனைப்பில் உள்ளது. மார்ச் 26, 2021 அன்று பிரதமர் மோடியின் டாக்கா வருகை வங்காள தேசத்தின் 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் கூட்டு நினைவேந்தலின் மகுடமாக இருக்கும்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கவலை இல்லை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

Lekha Shree

மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்

Tamil Mint

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

டெல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

sathya suganthi

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்

Shanmugapriya

“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்

Shanmugapriya

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

Lekha Shree

சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து சென்ற நபர்!

Shanmugapriya

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

Tamil Mint