வெற்றி கணக்கை தொடங்குமா இந்தியா? இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதல்..!


டி20 உலக கோப்பை தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி, இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய இந்திய வீரர்கள் ஏனோ டி20 போட்டிகளில் சொதப்பி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏமாற்றம் அளித்தனர். அந்த அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் மொத்தமாக துவண்டது இந்திய அணி.

பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணி.

Also Read  ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

இதை அடுத்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிரடி வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். முதல் போட்டியின் தோல்வி காரணமாக இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவை 3வது வீரராக களமிறங்கினர்.

அந்த முயற்சி கை கொடுக்கவில்லை. தவறான ஷாட்களை ஆடி ஆட்டம் இழந்ததை பார்த்து முன்னாள் வீரர்ளே கடுமையாக விமர்சித்தனர்.

போட்டிக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி, “நாங்கள் துணிச்சலோடு விளையாடவில்லை” என கூறி பேரதிர்ச்சி கொடுத்தார்.

Also Read  2வது டி20: ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இல்லை? புது வீரர்கள் யார் யார்?

பந்துவீச்சாளர் பும்ரா, “எங்களுக்கு ஓய்வு தேவை” என்றார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த அணி திடீரென சொதப்புவதற்கு என்ன காரணம் என்று தலையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையில் இந்திய அணி அபுதாபியில்இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி துணிச்சல் பெற்று இந்த போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணியும் வலுவான அணியாக உருப்பெற்று நிற்கிறது. அதனால், இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே மீண்டு வெளிவர வேண்டிய சூழல் இருக்கிறது.

Also Read  ஷாருக்கான் அதிரடியால் சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு..!

ரோகித், ராகுல், விராட், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டியே ஆக வேண்டும். பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.

இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றால், ஒருவேளை அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற சிறிய நம்பிக்கையில் உள்ளனர் இந்திய ரசிகர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்தால் பார்லே ஜி டெலிவரி செய்யப்பட்ட வினோதம்!

Shanmugapriya

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

28-ம் தேதி மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!!

Lekha Shree

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

Tamil Mint

மத்தியப் பிரதேசத்தில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு…!

sathya suganthi

முகேஷ் அம்பானியின் வலது கரம்…! ரூ.75 கோடி சம்பளம்…! அதிகாரி துறவியான கதை…!

Devaraj

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: என்ன நடந்தது.?

mani maran

“Go Corona Go” – கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

“ஆண் குழந்தை தான் வேண்டும்” – மனைவிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்த கொடூரன்..!

mani maran

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint

முதன்முறையாக ரூ.1.23 லட்சம் கோடியை தொட்ட ஜி.எஸ்.டி. வசூல் – கடந்தாண்டை விட 27% அதிகம்…!

Devaraj