இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்


இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. 

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, உள்துறை இணையமைச்சர்கள் அஸ்வினி குமார் சவுபே மற்றும் நித்தியானந்த் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஹர்ஷவர்தன், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

பெருந்தொற்றின் பாதிப்பு ஒரு கோடியைக் கடந்துள்ள நிலையில், பாதிப்பின் வேகம் 2 விழுக்காடாகவும், இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைந்த அளவாக ஒன்று புள்ளி 45 விழுக்காடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திருவிழாக்கள் இருந்த போதும், விரிவான சோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாகவும் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

Also Read  "தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!" - நடிகர் சித்தார்த் ஆவேசம்

கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி ஆயோக் உறுப்பினர், வி.கே. பால் பேசும்போது கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு 12 நாடுகள் இந்தியாவை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

தேனிலவுக்காக வாடகைக்கு விடப்பட்ட்ட பல்கலை. விருந்தினர் மாளிகை… மாநில அரசு அறிக்கை கேட்பு..!

suma lekha

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi

மருத்துவமனை தரையை சுத்தம் செய்த அமைச்சர்…!

sathya suganthi

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்: ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட இந்தியா.!

mani maran

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு! – பிரதமர் மோடி பாராட்டு!

Lekha Shree

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

நாடு முழுவதும் 18ம் தேதி மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு…! காரணம் இதுதான்…!

sathya suganthi