a

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 3.60 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது.

நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Also Read  இந்தியாவில் பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் புதிய கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லியில் 24 மணி நேரமும் சடலங்கள் எரிந்துகொண்டிருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,997,267 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 201,187 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,817,371 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.60 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3,293 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.79 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் எதிரொலி – 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு…!

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் பங்கெடுப்பு: நடிகை கங்கனா ரணாவத்

Tamil Mint

தமிழ் கற்க முடியாதது வருத்தமளிக்கிறது… பிரதமர் மோடி

HariHara Suthan

மூன்றாவது மாடியில் இருந்த குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்த காவலர்!

Shanmugapriya

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா – விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

Lekha Shree

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

“நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்களை தூண்டும்” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

Zomato விவகாரத்தில் பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள விஷால் பட நடிகை!

Lekha Shree