a

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,930,965 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 184,672 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,454,880 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.16 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.59 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  "வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்" - தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா – வங்காளதேசம் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

டெல்லி கலவரத்தில் எங்களை தாக்கியது அடியாட்கள் தான்… விவசாயிகள் இல்லை… போலீசார் அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

இருசக்கர வாகனத்தின் பின்னால் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற நபர்!

Shanmugapriya

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?

Tamil Mint

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

Tamil Mint