இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா…! 3வது அலையின் தொடக்கமா?


இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

Also Read  மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொரோனா இரண்டாவது அலையால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டன. இந்தியாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் முதலில் பாதிக்கப்பட்ட கேரள மருத்துவ மாணவிக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து... மக்களே உஷார்!

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அந்த மருத்துவ மாணவி சீனாவில் வூஹான் மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு 3ம் ஆண்டு படித்து வந்தார்.

சீனாவிலிருந்து கேரளா வந்த அவருக்கு தான் முதன்முதலாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Also Read  3 நாளில் ரூ.66,000 கோடி நஷ்டம் - பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி…!

இதனையடுத்து அந்த மாணவிக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்த திருச்சூர் மாவட்டம் மருத்துவ அலுவலர் ரீனா, “அந்த மாணவி டெல்லிக்கு சென்று படிப்பதற்காக திட்டமிட்டு இருந்தார். அதனால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தற்போது உடல்நலத்துடன் உள்ளார்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா:

Tamil Mint

கர்ப்பிணியர் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்…!

sathya suganthi

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree

மாட்டு சாணம் சிகிச்சை.. இந்த கொடிய தொற்று ஏற்படலாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 18+ வயதினருக்கு தற்போது தடுப்பூசி இல்லை…!

Devaraj

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

Tamil Mint

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

Tamil Mint

சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு கோடாாியால் வெட்டு – பதைபதைக்க வைக்கும் காட்சி

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint