a

“உறவினர் மரணப்படுக்கையில் இருக்கும்போது யார் கிரிக்கெட்டை பார்ப்பர்?” – ஆடம் ஜாம்ப்பா


ஐபிஎல் 2021ல் இருந்து பாதியிலேயே விலகிய ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா, “இந்த முறை வீரர்களுக்கான பாதுகாப்பு வளையம் மிகவும் பலவீனமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

சிட்னியில் மார்னிங் ஹெரால்டு ஊடகத்துக்கு ஆடம் ஜாம்ப்பா பேட்டியளித்தார். அதில், “அமீரகத்தில் போட்டிகள் நடந்தபோது பாதுகாப்பு வளையமான பயோபபுள் பாதுகாப்பாக இருந்தது. அந்த வளையத்துக்குள் இருக்க பழகிக்கொண்டோம்.

Also Read  கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர் படத்தின் படப்பிடிப்பு!

ஆனால், இப்போது இந்தியாவில் அந்த பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாக உணர்கிறேன். கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதால் போட்டியில் இருந்து விளக்கினேன். நான் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றபோதும் என்னால் சரிவர விளையாட முடியவில்லை.

வீட்டிற்கு போகவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. நான் பர்சனலாக போட்டிகளை துபாயில் நடைபெறுவதையே விரும்புகிறேன். ஆனால், நிறைய அரசியல் நடப்பதாக உணர்கிறேன். உலகக்கோப்பை டி 20 போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெற உள்ளது.

Also Read  ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம்!

ஆனால், அதற்கு 6 மாத காலம் உள்ளது. இந்த தருணத்தில் கிரிக்கெட் பார்ப்பது மனஅமைதிக்கு வழிவகுக்கும் என பலர் கூறுகின்றனர். ஆனால், கடும்ப உறுப்பினர் ஒருவர் மரண படுக்கையில் இருக்கும்போது யாருக்கு கிரிக்கெட்டை ரசிக்க தோன்றும்.

போட்டியில் இருந்து பாதியில் விலகுவது பண விரயம் தான். ஆனால், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பேட் கம்மின்ஸ் செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். இனி இதுபோன்ற உதவிகள் நிறைய வரும்” என கூறினார்.

Also Read  ஊரடங்கு காலத்தில் 6 லட்சம் மாஸ்க் தயாரித்து விற்ற பெண்கள்! - எவ்வளவு சம்பாதித்தார்கள் தெரியுமா?

மேலும், பிரட் லீயும் ரூ.41 லட்சத்தை இந்தியாவின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

பலம் வாய்ந்த பெங்களூரை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்!

Jaya Thilagan

டி காக் அதிரடியால் வெற்றி பாதைக்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ்!

Jaya Thilagan

துவம்சம் செய்த படிக்கல் – விராட் கோலி ஜோடி : ராஜஸ்தான் அணி மீண்டும் தோல்வி

Jaya Thilagan

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று மோதல்!

Jaya Thilagan

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj

ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்து வெளியான தகவல்…!

Lekha Shree