a

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!


கோவிட் பரவுதலின் சங்கிலியைக் கட்டுப்படுத்த இந்தியா சில வாரங்கள் லாக்டவுனில் இருக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி, பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனாவால் படுக்கை தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறையால் பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

Also Read  கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி நன்மையளிக்கும் - ஆய்வில் தகவல்...!

நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் கொரோனா கட்டுக்குள் வந்தபாடில்லை. இந்த சூழலில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஒருநாளில் இவ்வளவு அதிகமானோருக்கு தொற்று உறுதியாவது இதுவே முதன்முறை.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ எந்த நாடும் லாக்டவுன் போட விரும்பவில்லை, ஆனால் இந்த மிகவும் கடினமான மற்றும் அவநம்பிக்கையான சூழ்நிலையிலிருந்து வெளியேற இந்தியா உடனடியாக சில வாரங்களுக்கு லாக்டவுனை அமல்படுத்த வேண்டும்.

Also Read  தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி...!

இந்தியாவில் ஆக்ஸிஜன் நெருக்கடி குறித்து பேசிய டாக்டர் ஃபாசி, ஆக்ஸிஜனை எவ்வாறு பெறுவது என்று ஒரு திட்டத்தை உருவாக்க இந்திய அரசு, ஒரு நெருக்கடி குழுவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “மருந்துகள் மற்றும் பிற விஷயங்களைப் உடனடியாக உலக சுகாதார அமைப்பின் நாடுகளிடமிருந்தும் இந்தியா உதவி எடுக்க முடியும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இரண்டு சதவீத தடுப்பூசி போடுவது மிகவும் கடுமையான சூழ்நிலை. நிச்சயமாக அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். எனவே, இந்தியாவில் நாம் காணும் உண்மையான சிரமம் இருந்தபோதிலும், தடுப்பூசி இதற்கு எதிரான மிக முக்கியமான மருந்தாக இருக்கலாம். தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்.

Also Read  துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சவுரவ் கங்குலின் உடல்நிலை எப்படி உள்ளது ?

Tamil Mint

நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி…!

Devaraj

சதுரங்கத்தில் சாதித்த இந்தியா

Tamil Mint

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint

கொரோனா நெருக்கடி – இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய கூகுள், மைக்ரோ சாப்ட்…!

Devaraj

கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா:

Tamil Mint

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

தடுப்பூசிக்கு காத்திருக்கும் 70 சதவீத மக்கள்…! ஹெர்டு இம்யூனிட்டி பெற 3.5 ஆண்டுகள் ஆகலாம்…!

sathya suganthi

இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் ஒப்போவின் 6 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

Tamil Mint