2-வது டெஸ்டில் வென்ற தென்னாப்பிரிக்க அணி…! இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன?


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் முதுகுவலி காரணமாக கேப்டன் கோலி களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார்.

கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்றுக் கொண்டார். இந்த போட்டியில் கோலி இல்லாமல் இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தது.

இதனால் கோலியின் அருமையும் பெருமையும் இப்போது புரிந்திருக்கும் என சிலர் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த போட்டி முடிந்த பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில், “விராட் கோலி உடல் நிலை சரியாக இருக்கிறது. நலமுடன் இருக்கிறார்.

சிறிது நேரம் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தார். 3-வது டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடுவார் என நம்புகிறேன். நான் கேள்விப்பட்டவரை நான் கோலியிடம் பேசியது வரை அவர் உடல்நிலை இயல்புக்கு வந்துவிட்டது” என தெரிவித்தார்.

Also Read  இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் காலிப்பணியிடம்: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

மேலும், தோல்விக்கான காரணம் குறித்து கூறுகையில், “வண்டரர்ஸ் ஆடுகளம் இரு அணிகளுக்குமே சவாலானது தான். ஆடுகளத்தின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறியது.

தென்ஆப்பிரிக்கா அணி தங்களுடைய 4-வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தார்கள். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

Also Read  ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்துவிட்டால் அதை நீண்ட நேரம் தக்க வைக்க வேண்டும். முதல் இன்னிங்ஸ் மிகவும் சவாலாக இருந்தது. 60 ரன்களை கூட பார்ட்னர்ஷிப்பில் சேர்க்க முடியவில்லை.

இன்னும் சிறிது சிறப்பாக பேட் செய்து இருக்கலாம். நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் நல்ல ஸ்டார்ட் கிடைத்ததும் அதை சாதகமாக மாற்ற முயலவேண்டும். முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் இதுதான் வித்தியாசம்.

ராகுலின் சதம் இந்தியாவுக்கு மிகப் பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்தது. அதேபோல் எல்கரின் 96 ரன்கள் தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

Also Read  அவரே விலகுவார் என காத்திருந்த தேர்வுக்குழு? விராட் கோலியின் கேப்டன்சி நீக்கப்பட்டதன் பின்ணணி..!

இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடினார் ஹனுமா விஹாரி. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் அவரது பேட்டிங் அற்புதமாக இருந்தது.

இந்த போட்டியை வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ளமாட்டோம். வெற்றி பெறவேண்டும். 240 ரன்கள் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் டிபெண்ட் செய்வது சாதாரணமானது அல்ல. மிகுந்த அதிர்ஷ்டம் இருந்தால் தான் டிபெண்ட் செய்ய முடியும்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு : வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு.!

suma lekha

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

சென்னை வந்தடைந்தார் விராட் கோலி!

Jaya Thilagan

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…?

sathya suganthi

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை தேர்வு!

Lekha Shree

கோவிட் 2-வது அலைக்கு 5ஜி அலைக்கற்றை தான் காரணமா..? உண்மை என்ன..

Ramya Tamil

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

2வது நாளாக 2.6 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

Devaraj

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்! – அதிர்ச்சியில் பயணிகள்

Shanmugapriya