a

கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – உலக சுகாதார அமைப்பு


கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என்றும் இந்தியாவில் நிலை காவல் அளிக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 3 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது.

நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

Also Read  திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  "கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" - உயிரிழந்த கர்ப்பிணி டாக்டரின் நெஞ்சை உருக்கும் பதிவு!

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,602,456 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 189,549 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,862,119 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எரிக்க இடமின்றி குவியலாக வைத்து தீ முட்டப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று என்றும் இந்தியாவில் நிலை காவல் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

Also Read  அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் உதவ தயராக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

Tamil Mint

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

“இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்

Tamil Mint

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

கணவர் கண் முன்னே 19 வயது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya