இந்தியா – பிரிட்டன் இடையே விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை!


டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா – பிரிட்டன் இடையே விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ், பிரிட்டனில் உருமாற்றம் பெற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, கனடா, ஹாங்காங், இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.

Also Read  வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார்: மத்திய அரசு

இந்நிலையில், இந்தியாவும் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும், இந்த தடை உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் காலத்திற்காக தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

Also Read  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

இந்த புதிய வடிவம் மிக ஆபத்தானது என்பதற்கும், இது தடுப்பு மருந்துக்கு வேறுமாதிரியாக எதிர்வினையாற்றும் என்பதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை ஆனால் இது 70 சதவீதம் அதிக அளவில் பரவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளதாக உயர்மட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை; 15,090 புள்ளிகளை தொட்டது நிப்ஃடி

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு! ஒரு சிலிண்டர் விலை ரூ.915.50

suma lekha

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree

‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம்…!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்…

suma lekha

கமலமாக மாறும் டிராகன் பழம்… குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி சொன்ன சூப்பர் காரணம்!

Tamil Mint

அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியம்: பிரதமர் மோடி

Tamil Mint

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan