மும்பை டெஸ்ட் – மயங்க் அகர்வால் அதிரடி சதம்… பவுலிங்கில் மிரட்டிய நியூசிலாந்தின் அஜாஸ் படேல்..!


மும்பை டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது.

மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Also Read  சர்வதேச போட்டிகளில் இருந்து டுவைன் பிராவோ ஓய்வு..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

இரு அணிகளும் மோதிய கான்பூர் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. இந்நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டன.

முதல் டெஸ்டில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி இப்போட்டியில் விளையாடினார். ஆனால், டக் அவுட்டானார். இவரது LBW அவுட் சர்ச்சைக்குள்ளானது.

இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு 3வது நடுவர் அவுட் கொடுத்தது விமர்சனத்திற்கு உள்ளாகியது.

Also Read  நியூசிலாந்தை பழிவாங்கியது இந்தியா: டி20 தொடரை 3-0 என்று வெற்றி

நடுவர் அவுட் கொடுத்தவுடன், விராட் ரிவ்யூ கேட்டதில், பந்து பேட்டில் படுவது தெளிவாகத் தெரிவதாக ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், “நவீன தொழில்நுட்பங்களை தாண்டி முக்கியமான போட்டிகளில் இதுபோன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றும் தவறான முடிவுகள் நடுவர்களின் திறன் மீது கேள்வி எழுப்பும்” என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடக்க வீரர் கில் 44 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த புஜாரா மற்றும் விராட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 3 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்கள் எடுத்து திணறிய இந்திய அணியை மயங்க் அகர்வால் சதம் விளாசி தூக்கி நிறுத்தினார்.

அடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம் அளித்துள்ளார். தற்போது மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Also Read  கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

மயங்க் அதிரடியால் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

அதேபோல் பவுலிங்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் மிரட்டினார். 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2 அலை எப்போது முடிவுக்கு வரும்…! – நிபுணர் விளக்கம்

sathya suganthi

லவ்லினா பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியை காண அசாம் சட்டப்பேரவை ஒத்திவைப்பு.!

suma lekha

“முதலமைச்சரே நீங்களா?” – டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போல இருப்பவரை பார்த்து குழம்பிய மக்கள்..!

Lekha Shree

பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்..! இதுதான் காரணமா?

Lekha Shree

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

ஒமிக்ரானை கண்டறிய புதிய டெஸ்டிங் கிட் அறிமுகம்..!

suma lekha

சென்னையில் இன்று தோனிக்கு பாராட்டு விழா…!

Lekha Shree

ஐபிஎல் 2021: அசத்தல் வெற்றி பெற்றாலும் வெளியேறிய நடப்பு சாம்பியன்ஸ் மும்பை…!

Lekha Shree

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி!

Tamil Mint

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint