கான்பூர் டெஸ்ட்: முதல்நாளில் இந்திய அணி 258 ரன்கள் குவிப்பு..!


கான்பூரில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 20 ஓவர் தொடரை எதிர்கொண்டது.

Also Read  "God decides your Destiny!" - தனது கம்பேக் குறித்து அறிவித்த யுவராஜ் சிங்..!

அதில் 0-3 என்ற கணக்கில் தோல்வியுற்றது. அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து கில் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா 26 ரன்களில் அவுட்டானார். சுப்மன் கில் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Also Read  6 வீரர்களுக்கு கொரோனா - 6-வது பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நிறுத்தம்!

ரஹானே 35 ரன்களில் அவுட் ஆனபோது, இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. அதை அடுத்து கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்-ஜடேஜா ஜோடி அரைசதம் அடித்து அதிரடி காட்டினர்.

இதனால், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களும் ஜடேஜா 50 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருக்கின்றனர்.

Also Read  2வது சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை..! திணறிய பஞ்சாப்..!

நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் டிம் சவுத்தீ ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

Tamil Mint

டெல்லி விவசாயிகள் போராட்டம்: நட்சத்திரங்களின் ட்விட்டர் மோதல்! ரிஹானா முதல் சித்தார்த் வரை நடந்தது என்ன?

Tamil Mint

ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற 2 பேர் கைது…!

Devaraj

ஐபிஎல் 2021: ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – வெற்றியின் ரகசியத்தை கூறிய கே.எல்.ராகுல் !

Lekha Shree

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

5 மாத குழந்தைக்காக ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்த மத்திய அரசு!

Tamil Mint

ஐபிஎல் 2021: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா..!

Lekha Shree

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – நடிகர் பிருத்விராஜ் உருவப்படம் எரிப்பு..!

Lekha Shree

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை – மத்திய அரசு ஒப்புதல்..!

Lekha Shree