தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்…!


ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 202 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுவலி காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்றார். விராட் கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கினார்.

Also Read  ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தள்ளிவைப்பு! - ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு…!

முதல் முறையாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கு ராகுல் தலைமை ஏற்று அணியை வழிநடத்துவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டி காக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டதால் அவருக்கு பதிலாக கெயில் வரேனே சேர்க்கப்பட்டுள்ளார்.

Also Read  ரஜினியை வைத்து சின்னப்புள்ள தனமாக ட்விட்டரில் சண்டைபோட்ட சென்னை-ராஜஸ்தான் அணிகள்…!

பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகும் இந்திய அணி சோபிக்கவில்லை. கேப்டன் ராகுல் அரைசதம் கடந்து அவுட்டானார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொல்லிக்கொள்ளும் படி ஆடாமல் நடையை காட்டினர். இதனால், இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Also Read  பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: கொரோனா பாதிப்பு 1,00,00,000-யை தாண்டியது!

Tamil Mint

“இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – பிரகாஷ் ஜவடேகர்

Lekha Shree

மீண்டும் களத்தில் குதித்த ராகுல் காந்தி! கேரளாவில் செய்த சூப்பர் விஷயம் இதோ!

Devaraj

உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதி…!

Lekha Shree

டி20 உலகக்கோப்பை – இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்ப்பு..!

Lekha Shree

பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம்: தமிழிசை சௌந்தரராஜன் உறுதி..!

suma lekha

தமிழக ஊர்தி நிராகரிப்பு விவகாரம் – அண்ணாமலை விளக்கம்..!

suma lekha

நீட் தேர்வு விலக்கு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் டெல்லி பயணம்..!

suma lekha

பச்சை நிறத்தில் மாறிய கங்கை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Lekha Shree

கூகுள் மீட்டில் திருமணம்… சொமேட்டோவில் விருந்து… ஜி பே-ல் மொய்… அசத்தும் வட இந்திய காதல் ஜோடி..!

Lekha Shree

தோனியை கை காட்டியது சச்சின்! – மனம் திறந்த சரத்பவார்!

Lekha Shree

மும்பை சிறையில் உள்ள மகன் ஆர்யன் கானை சந்தித்த நடிகர் ஷாருக்கான்..!

Lekha Shree