டி20 உலகக்கோப்பை – ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி..!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி20 உலக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.

Also Read  தலைநகரில் நடந்த கொடூரம்! பாலியல் பலாத்காரம் செய்து 9 வயது சிறுமி எரித்து கொலை..!

ரோகித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தனர். ராகுல் 47 பந்துகளில் 69 ரன்களும் ரோகித் சர்மா 48 பந்துகளில் 74 ரன்களும் குவித்தனர்.

இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய பந்த் மற்றும் பாண்டியா ஜோடி கணிசமான ரன்கள் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 210 ரன்கள் குவித்தது.

Also Read  2032ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடக்கவுள்ளது தெரியுமா?

இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன் மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Read  "அடுத்த ஆர்சிபி கேப்டன் இவர்தான்!" - Hint கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

இதனால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்றே பிரகாசமாகியுள்ளது. இருந்தாலும் மற்ற அணிகளும் வெற்றி, தோல்வி பொறுத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு…!

Lekha Shree

உலகம் சுற்றிய டீக்கடைக்காரர் காலமானார்!!!

Lekha Shree

தீபாவளிக்கு கிஃப்டாக ஸ்வீட்ஸ்க்கு பதில் ‘இதை’ ஊழியர்களுக்கு கொடுத்து அசத்திய தலைவர்..!

Lekha Shree

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது!!

Tamil Mint

5000 பிரசவம் பார்த்த நர்ஸ்… தன் பிரசவத்தில் உயிரிழந்த சோகம்…

Lekha Shree

முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு – 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

sathya suganthi

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

“அற்புதமான எதிரணி” – இந்திய ஹாக்கி அணியை பாராட்டிய பிரிட்டன் ஹாக்கி அணி!

Lekha Shree

பதக்க மழையில் நனையும் இந்தியா..! பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர்கள்..!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Devaraj