இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டிகள் – தொடரை வென்றது இந்திய அணி..!


இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.

இரு அணிகள் மோதிய 2வது போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தனர் இலங்கை அணியினர்.

இலங்கை அணிக்கு அவிஷ்கா மினோத் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது தனது நான்காவது ஓவரை வீசிய சகால் திருப்பம் தந்தார்.

Also Read  தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்…!

அவிஷ்கா ஒருநாள் அரங்கில் நான்காவது அரைசதம் எட்டினார். இவரை புவனேஷ்வர் குமார் அவுட்டாக்கி அனுப்பிவைத்தார்.

மறுபக்கம் தனஞ்சயா சில்வா 32 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சஹர் அவுட்டாகினார். கடைசி நேரத்தில் கருணாரத்னே 33 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

Also Read  கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்ஸ்…!

இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர், சஹல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஷிகர் தவான் 29, இஷன் கிஷன் ஒரு றன் எடுத்து அவுட்டானார்கள். இந்தியா 65 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு மனிஷ் பாண்டே உடன் சூரியகுமார் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தனர். மணிஷ் பாண்டே 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் வெளியேறினார்.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

ஹர்திக் பாண்டியா டக் அவுட்டானார். கருணால் பாண்ட்யா35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சஹார்-புவனேஸ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது.

சஹார் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? சூடு பிடிக்கும் விவகாரம்..!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Tamil Mint

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

பஞ்சாபை சமாளிக்குமா ஐதராபாத்?

Devaraj

இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் – சில துளிகள்…!

Devaraj

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவதில் சிக்கல்!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி: 243 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா!

Tamil Mint

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

பரபரப்பான 4வது டி20 – இந்தியா திரில் வெற்றி!

Devaraj

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் நீடிக்க இவர் தான் காரணம்! வெளியான சுவாரஸ்ய தகவல் இதோ!

Tamil Mint