a

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!


சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தற்போது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்திய கிரிக்கெட் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது மனக்குமுறலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி இருவரும் சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் படித்தவர்கள் தான்.

அந்த ட்விட்டர் பதிவில் அஸ்வின், “பிஎஸ்பிபியின் பழைய மாணவனாக மட்டுமல்ல இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருக்கிறேன்.

Also Read  தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! ஒரே கட்டமாக தேர்தல்!

இதனால் இரண்டு நாட்களாக என்னால் தூங்க கூட முடியவில்லை. அவ்வளவு வேதனையாக இருக்கிறது. ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர். ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய சம்பவங்களை தடுக்க நாம் செயல்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “பள்ளி என்பது கிரேட், மார்க் என்பதற்காக மட்டுமல்ல. பள்ளிக் குழந்தைகளிடம் தைரியத்தை வரவழைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்வது குறித்து அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். எதிர்கால சந்ததியை வலிமையாக மாற்ற வேண்டும்” என்றும் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read  கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா...

ஏற்கனவே சோசியல் மீடியா முழுவதும் பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அஸ்வினின் இந்த ட்வீட் தற்போது தனி கவனம் பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

“சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்” – சிபிசிஐடி

Lekha Shree

50 பந்துகளில் 95 ரன்கள் – ஐபிஎல்-க்கு முன்பே மிரட்டிய விஜய் சங்கர்!

Lekha Shree

எனக்கு இந்தி தெரியுமா? உண்மையை உடைக்கும் கனிமொழி

Tamil Mint

சூர்ய குமார் யாதவுக்கு விராட் கோலி அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ…!

Lekha Shree

ஹரி நாடார் மீது ரூ.1.5 கோடி மோசடி புகார்…!

sathya suganthi

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 பேருக்கு கொரோனோ தொற்று

Tamil Mint

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil

சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

Tamil Mint