விமர்சனங்களுக்கு வேறு விதமாக பதிலடி கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கு தயாராக அந்நாட்டு உள்ளூர் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடுகிறார்.

Also Read  குட்டி நாடு.! அனுப்பினது ரெண்டே பேரு.! தங்க பதக்கத்தை சொல்லி அடிச்ச சிங்கப்பெண்

சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார் அஸ்வின். பேட்டிங்கிலும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது சாமர்செட் அணி. அஸ்வின் விளையாடிய சர்ரே அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதல் அணியில் தமிழக வீராங்கனை தேர்வு!

விரைவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அஸ்வினின் ஆட்டத்திறன் குறித்து சமூக வலைதளங்களில் பலர் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அஸ்வின் இந்த அபார பந்துவீச்சால் சாமர்செட் அணி 69 ரன்களுக்கு சுருண்டது.

Also Read  கொரோனா பரவல் - ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

இங்கிலாந்து தொடருக்கான அணியில் அஸ்வினின் பங்கு முக்கியமானதாக கருதப்படும் நிலையில், அவரது இந்த பந்துவீச்சு இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை 145 ரன்களுக்கு சுருட்டிய ஜோ ரூட்! 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்!

Lekha Shree

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

Tamil Mint

மொயின் அலியை படுமோசமாக விமர்சித்த தஸ்லிமா நஸ்ரின் – வலுக்கும் கண்டனங்கள்!!

Jaya Thilagan

விஜய் ஹாசரே கோப்பை – ஆந்திர அணியிடம் வீழ்ந்த தமிழக அணி

Devaraj

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – வெஸ்ட் இண்டீஸ் அமோக வெற்றி..!

Lekha Shree

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

Tamil Mint

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

2வது டி20 போட்டி: வெற்றியை தொடருமா இளம் இந்திய அணி.!?

suma lekha

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகள்..!

Lekha Shree

அகமதாபாத் டெஸ்ட் போட்டி: 294 ரன்கள் குவித்த இந்திய அணி; சதம் விளாசி ரிஷப் பந்த் அசத்தல்!

Lekha Shree

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

சாம் கரனிடம் தோனியை கண்டோம் – ஜாஸ் பட்லர் புகழாரம்!

HariHara Suthan