ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் – மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்கள்…!


இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற டி20 போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நார்த்தாம்ப்டனில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

Also Read  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா…!

இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

அதன்பின் மழை நிற்காததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Also Read  ஐபில் போட்டி: "எங்களையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்" பஞ்சாப் முதல்வரின் கோரிக்கை!

அத்துடன் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையிலும் ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒரு கேட்சாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் 19வது ஓவரில் ஹர்லீன் விரைவாக செண்டு சாமர்த்தியமாக பிடித்த கேட்சை பார்த்து பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பிரமித்துப் போய் உள்ளார்கள.

Also Read  இந்திய அணி அதிரடி காட்டுமா?... அடிபணியுமா?...

மேலும், அவர்களில் பலரும் ஹர்லீனுக்கு தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகளிர் குத்துச்சண்டை: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லோவ்லினா…!

Lekha Shree

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தேர்வு

Tamil Mint

உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? – ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Lekha Shree

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!

Devaraj

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி… வித்தியாசமாக வாழ்த்திய ஷாருக் கான்..!

Lekha Shree

ட்ரெண்டாகும் தல தோனியின் அசத்தலான ஹேர் ஸ்டைல்.

mani maran

முதல் டெஸ்ட் போட்டி; பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள்! நூற்றாண்டு சாதனை படைத்த அஸ்வின்!

Tamil Mint

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

ஐசிசி தரவரிசை – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

Devaraj

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது உனக்கென்ன கவலை? – விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய லக்ஷ்மன்!

Jaya Thilagan

ஸ்மிருதி மந்தனாவின் சாதனை – பதிலடி கொடுத்த இந்திய மகளிர் அணி

Jaya Thilagan