சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!


சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்கள் காலையிலேயே அதகளப்படுத்த தொடங்கிவிட்டனர்.

காரணம், ஜூலை 7 மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள். 40வது வயதில் தோனி அடியெடுத்து வைக்கிறார்.

இதனால், காலையிலே ஹேப்பி பர்த் டே தோனி-ங்கிற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக தொடங்கிவிட்டது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தாண்டி இந்த கிராக்கெட் வீரரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம்.

மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் ஒரு வீரராக களமிறங்கி அதன் பின்னர் இந்திய அணிக்கு ஒரு கேப்டனாக தலைமைதாங்கி 2007ஆம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பை தொடரையும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரையும், 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரையும் கைப்பற்றி கொடுத்தார்.

ஒரு இந்திய கேப்டன் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று ஐசிசி தொடர் கோப்பைகளை கைப்பற்றி கொடுத்தது இதுவே முதல் முறை.

அதே சமயம் ஒரு வீரராக மிகச் சிறப்பாக இந்திய அணிக்காக பல போட்டிகளில், இறுதியில் களம் இறங்கி விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி கடைசியாக விளையாடிய ஐசிசி தொடர் 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகும்.

மகேந்திர சிங் தோனி 20 ஓவர் உலக கோப்பை தொடர் நிச்சயமாக விளையாடி விட்டு ஓய்வு பெறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் சத்தமே இல்லாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.

இருந்தபோதும் மஹேந்திர சிங் தோனி பேட்டிங்கில் செயற்கறிய 5 சாதனைகளை புரிந்துள்ளார்.

ஒருநாள் தொடர்களில் அதிகமான சிக்சர்களை அடித்த ஐந்தாவது வீரர்

சிங்கிள் அடிப்பது போன்று சிக்சர்களை அடித்து குவிப்பதில் வல்லவரான மகேந்திரசிங் தோனி ஒருநாள் தொடர்களில் 229 சிக்சர்களை அடித்து ஒருநாள் தொடரில் அதிகமான சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.

மேல் 826 போர்களை ஒருநாள் தொடர்களில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2004 முதல் 2019 வரை 350 ஒருநாள் தொடர்களில் பங்கேற்று 297 போட்டிகள் விளையாடி 10,773 ரன்கள் அடித்துள்ளார்.

அதில் 10 சதங்களும் 73 அரை சதங்களும் அடங்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தனது ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனியின் இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை மகேந்திர சிங் தோனி ஐந்தாவது இடத்திலேயே நீடித்துவருகிறார்.

Also Read  இன்ஸ்டாகிராம் நட்பு - கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

ரெம்டெசிவர் மருந்துக்கு இறக்குமதி வரி ரத்து

Jaya Thilagan

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

ராமர் கோயில் நிதி சேகரிப்பா? அல்லது தேர்தல் பிரச்சாரமா? பாஜகவின் புதிய யுக்தி!

Tamil Mint

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya

கோல் மழை பொழிந்த யுஏஇ – இந்திய கால்பந்து அணி படுதோல்வி!

HariHara Suthan

பெடரரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஜோகோவிச்!

Jaya Thilagan

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய வீடியோ – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!

sathya suganthi

கும்பமேளாவில் பங்கேற்ற 1,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

விவசாயிகள், அரசுக்கு இடையே இன்று ஏழாம் சுற்று பேச்சுவார்த்தை

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி தோல்வி!

suma lekha