இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு? – பிசிசிஐ தரப்பு விளக்கம்..!


இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட தடை விதித்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற உள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரஹானே இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார்.

இந்த போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டயட் பிளான் குறிப்புகள் இணையத்தில் வெளியானது.

அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த வகையிலும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை உட்கொள்ள கூடாது என்றும் வீரர்கள் ஹலால் முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியது.

Also Read  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் ரத்து…!

தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், “இந்த டயட் விவகாரம் விவாதிக்கப்படவில்லை. இது அமல்படுத்தப்படாது. எப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது தெரியவில்லை. முன்பு எப்போதாவது எடுக்கப்பட்டதா என்பதிலும் உறுதி இல்லை.

Also Read  பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. உணவுமுறை என்பது தனி நபர்களின் விருப்பம் சார்ந்தது. இதில் பிசிசிஐ-க்கு எந்த ஒரு பங்கும் இல்லை.

ஏதாவது ஒரு தருணத்தில் ஏதாவது ஒரு வீரருக்கு ஹலால் பற்றி அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். அதாவது ஒரு வீரருக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை எனில் உண்ண வேண்டாம் என்று கூறி இருக்கலாம். இந்த ஹலால் விவகாரம் பிசிசிஐ கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

Also Read  கப்புல் அவுட்டிங் - வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

பிசிசிஐ ஒருபோதும் எந்த வீரர் எதை சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்பதை அறிவுறுத்தியது இல்லை. வீரர்கள் தங்கள் உணவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். நாங்கள் இதில் எப்படி தலையிட முடியும்?” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

Tamil Mint

“பாலியல் துன்புறுத்தலும் வன்கொடுமையாகவே கருதப்படும்” – மும்பை நீதிமன்றம்

Lekha Shree

பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! – வைரலாகும் சிசிடிவி காட்சி

Shanmugapriya

உத்தரபிரதேசத்தில் தேர்வு செஞ்சி சென்னைல வேலை கொடுப்பீங்களா: ஆவேசமான எம்.பி.

mani maran

வெளியானது ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை .!

suma lekha

ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கிக்குள் அனுமதி மறுப்பு!!!

Lekha Shree

கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா : ஒரே நாளில் 88 பேர் பலி

suma lekha

அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்?

Lekha Shree

எம்.எஸ். தோனியின் பெற்றோருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

கேரளாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Shanmugapriya

தினமலர் VS பாஜக! செய்தியை நீக்கிய தினமலர்! ரூ.100 கோடி கேட்கும் பாஜக!

Lekha Shree

சாதியை குறிப்பிட்டு இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாவை திட்டியவர் கைது!

suma lekha