a

‘Battlegrounds’ கேமிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் – தடை செய்ய கோரி பலர் ட்வீட்..!


PUBG விளையாட்டின் புதிய பரிணாமமான Battlegrounds கேமிற்கு கடக்கும் எதிர்ப்புகள் உண்டாகியுள்ளது. அந்த கேமை இந்தியாவில் தடை செய்ய கோரி பலர் ட்விட்டரில் ட்வீட் செய்து வருகின்றனர்.

பல இந்திய அரசியல் பிரமுகர்களும் இந்த கேமை தடை செய்ய என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் இந்த கேமை உருவாக்கிய Krafton நிறுவனம் சீன நாட்டை சேர்ந்த நிறுவனம். இந்த கேம் மூலம் சீன நாடு நம் நாட்டின் பாதுகாப்பையும் நம் மக்களின் பிரைவசியையும் குலைக்க நேரிடும் என பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ், மிகவும் பிரபலமான PlayerUnknown’s Battlegrounds (PUBG) மொபைல் உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான 118 பயன்பாடுகளை இந்திய அரசு செப்டம்பர் 2 ம் தேதி தடை செய்தது.

Also Read  மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள PUBG, இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த விளையாட்டு தற்போது புதிய பரிணாமத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  கொரோனாவை தொடர்ந்து அடுத்த அச்சுறுத்தல் – மக்களை திணற வைக்கும் மஞ்சள் புகை...!

இருப்பினும், இந்த விளையாட்டு PUBG மொபைல் விளையாட்டாக இந்தியாவில் அறிமுகமாகாமல் Battlegrounds mobile india என்ற பெயரில் அறிமுகமாகிறது.

Battlegrounds Mobile India வீடியோ கேம் விளையாட்டுக்கான முன்பதிவு இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பலர் முன்பதிவு செய்தனர். ஆனால், தற்போது பலர் அந்த கேமை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read  Zomato விவகாரம்: பெண்ணுக்கு செக் வைத்த டெலிவரி பாய்! இது செம டுவிஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தொற்றின் உயிர் இழப்பின் எண்ணிக்கை 1.50 சதவீதம் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சகம்

Tamil Mint

வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

Tamil Mint

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan

நகைப் பிரியரா நீங்கள்…! உங்களுக்கான அப்டேட் இதோ…!

sathya suganthi

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

சோனு சூட்டுக்கு ஐநா விருது

Tamil Mint

வீட்டிலேயே கொரோனா சுய பரிசோதனை…! எப்படி செய்வது…!

sathya suganthi

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

“காஷ்மீர் டு கன்னியாகுமரி” – சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் கதை!

Shanmugapriya