பிரபல மல்யுத்த வீராங்கனை மர்மநபர்களால் சுட்டுக்கொலை…!


தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியாவும் அவரது சகோதரரும் ஹரியானா மாநிலம் சோனேபட் ஹலால்பூரில் உள்ள சுஷில் குமார் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் நிஷாவின் தாய் தனபதியும் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் ரோஹ்தக்கின் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் நிஷா தஹியா மற்றும் அவரது சகோதரர் சூரஜ் ஆகியோரின் உடல்களை சோனேபத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. துப்பாக்கிச்சூடுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, செர்பியாவின் பெல்கிரேடில் நடந்த மல்யுத்த U-23 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நிஷா தஹியா 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

Also Read  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

நிஷா தஹியா 2014 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் நடந்த கேடட் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு 60 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார். 2015ல் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.

வெண்கலம் வென்ற பிறகு, அவர் மெல்டோனியம் என்ற மருந்தை பயன்படுத்தியதாக 2016ல் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரால் தடைசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் நான்கு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

Also Read  அச்சுறுத்தும் டவ்தே புயல்… குஜராத்தில் நிலநடுக்கம்!

2015 இல் கேடட் பதக்கங்கள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் வெண்கலம் வென்ற பிறகு அவர் ரயில்வேயில் வேலை பெறவிருந்தார், ஆனால் ஊக்கமருந்து தடைக்குப் பிறகு அந்த வாய்ப்பு நழுவியது.

இருப்பினும், அக்டோபரில் நடந்த U-23 தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஜலந்தரில் நடந்த 65 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு நிஷா தஹியா 2019 இல் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.

Also Read  'லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!' - தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹரியானா: பாஜக எம்.பி. கார் மோதி ஒரு விவசாயி படுகாயம்..!

Lekha Shree

சிவசங்கர் பாபா வழக்கு – சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை தலைமறைவு!

Lekha Shree

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint

500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் தன்னலமற்ற சேவை!

Shanmugapriya

சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

Tamil Mint

“சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள கடிதம் தற்கொலை தொடர்பானது அல்ல!” – கோவை மாணவியின் தந்தை..!

Lekha Shree

சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

sathya suganthi

இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

Once a Lion, Always a Lion… வைரலாகும் லோகேஷ் கனகராஜ் ட்வீட்…!

suma lekha

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை…! மத்திய அரசு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல்…!

sathya suganthi