a

பச்சை நிறத்தில் மாறிய கங்கை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!


உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்தியாவின் புனித நதியான கங்கை பச்சை வண்ணத்தில் மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

கங்கையின் நீர் நச்சுத்தன்மை உள்ளதாக மாறலாம் என்றும் இந்த பச்சை நிறம் நீண்ட காலமாக நீடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றும் சோதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே புண்ணிய நதியான கங்கையின் வண்ணம் பச்சை நிறத்தில் மாறி இருப்பது உள்ளூர் வாசிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது. வாரணாசியில் கங்கை நதியின் அனைத்து படித்துறைகளில் இருந்து பார்த்தாலும் பச்சை வண்ணமே தெரிகிறது.

இது குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கங்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பி.டி. திரிபாதி கூறுகையில், “கங்கையின் இந்த பச்சை வண்ணத்துக்கு காரணம் மைக்ரோசிஸ்டிஸ் பாசி.

Also Read  மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! - ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

இவை ஓடும் நீரில் காணப்படும். ஆனால், இவை பொதுவாக கங்கை நதியில் காணப்படுவதில்லை. தண்ணீர் ஓட்டம் தடைபடும் போது ஊட்டச்சத்துகளுக்கான நிலை உருவாக்கப்படும் போது அங்கு மைக்ரோசிஸ்டிஸ் வளரத் தொடங்குகிறது.

அதன் சிறப்பு என்னவென்றால் குளங்கள் மற்றும் கால்வாய்களின் நீரில் மட்டுமே வளர்கிறது. தற்போது கங்கையில் காணப்படும் பாசி அருகில் இருக்கும் ஏரி குளங்களில் இருந்து வந்திருக்கலாம். நீரின் ஓட்டம் அதிகரிக்கும்போது மறைந்துவிடும்.

Also Read  "ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்.." - உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

ஆனால் நெடுநாள் நீரோட்டம் இல்லாமல் இதே நிலையில் நீடிக்குமானால் அது நியூரோடாக்சின் மைக்ரோசிஸ்டின் வெளியிடும். அது நீரில் உள்ள உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது” என்கிறார்

மேலும் இது குறித்து கூறிய சூழலியல் மாசு விஞ்ஞானியான கிர்பா ராம், “நெடுநாளைக்கு நீரின் ஓட்டம் அதிகரிக்காமல் இருக்கும் என்றால் சூரிய ஒளி அடி வரை செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.

Also Read  வழக்கமான ரயில் சேவை எப்பொழுது தொடங்கப்படும்? ரயில்வேத்துறை விளக்கம்

இதன் மூலம் ஒளிச்சேர்க்கை ஏற்பட்டு மைக்ரோசிஸ்டிஸ் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். அதே நேரத்தில் இது ஒன்றும் பயப்படும்படியானது கிடையாது.

மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும் இயல்பான விஷயம் தான். அதே நேரத்தில் இந்த நீரில் குளித்தால் தோல் நோய் ஏற்படும். குடித்தால் கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என எச்சரித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

ஏறுமுகத்தில் கொரோனா – வார இறுதியில் ஊரடங்கு..!

Lekha Shree

“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என எழுப்பப்படும் குரல்கள் – பின்ணணி என்ன?

Lekha Shree

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

அச்சுறுத்த தயாராகும் “டெல்டா பிளஸ்” கொரோனா – புதிதாக கண்டுபிடிப்பு…!

sathya suganthi

மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

Lekha Shree

பெற்ற மகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

Shanmugapriya

இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பெரிய சாதனையா? உலகை உன்னிப்பாக பார்க்க வைக்கும் இந்திய இளைஞர்

Tamil Mint

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருமா? இப்போதைய நிலவரம் என்ன? முழு விவரம்!

Tamil Mint

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint