சுயநினைவின்றி சாலையில் கிடந்த நபர்… தோளில் தூக்கிச் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளர்!


சென்னை கீழ்ப்பாக்கத்தில் மழையில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அவரை பாராட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Also Read  "தல… தல… இந்த வருஷம் கப் நமக்கு தான்" - ரசிகர்களுக்கு Thumbs Up காட்டிய தோனி..!

சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

விடிய விடிய பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

Also Read  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல இடங்களில் மரங்கள் விழுந்தும் கண்களுக்கு தெரியாத பள்ளங்களால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீட்பு பணிகளில் மீட்பு குழுவினரும் காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் சாலையில் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அவரை தனது தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

இவர் அந்த நபரை தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதும் இவரது சேவையை பலரும் வியந்து பாராட்டினர். மேலும், இவரது சேவையை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவும் பாராட்டியுள்ளார்.

Also Read  தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்: ரஜினியின் திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன?

Tamil Mint

சுதந்திர தினம்: பதக்கம் பெறும் தமிழக காவல்துறையினர்

Tamil Mint

பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்

Lekha Shree

ஓடும் ரயிலில் ஏறி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம்…! எஸ்.பி. நேரில் அழைத்து அறிவுரை..!

Lekha Shree

அடுத்த ஆப்பு போக்குவரத்து துறைக்கா….! எச்சரிக்கும் போக்குவரத்து கழகம்…. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமா…!

VIGNESH PERUMAL

தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா? – சுகாதாரத் துறை விளக்கம்!

Shanmugapriya

அடிக்கடி ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்குமா? உண்மை என்ன?

Lekha Shree

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

ஊரக உள்ளாட்சித் தேர்தல்… வாக்குப்பதிவு தீவிரம்..!

suma lekha

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

முதுகுளத்தூர் கல்லூரி மாணவன் உயிரிழப்பு – காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

Lekha Shree

நாளை கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்

Tamil Mint